என்னென்ன தேவை?
கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும். ஒரு நான் ஸ்டிக் தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.
No comments:
Post a Comment