புதுடெல்லி: சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் ரயிலை இந்தியன் ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.இதற்கான சோதனை ஓட்டம் நடத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
முன்மாதிரியாக சூரிய சக்தியை கொண்டு ரயிலை இயக்க சோதனையில் முதலில் ரயில் பெட்டிகளில் சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டு உள்ளன. மிகவிரைவில் அனைத்து மொத்த ரயில்களிலும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய மின்சக்தியானது, ரயில்வேயில் டீசல் பயன்பாட்டை குறைக்கும், செலவினங்களை குறைக்கும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். ரயில்களில் பொறுத்தப்பட்டு உள்ள சோலார் தகடுகள் மூலம் தற்போது 17 யுனிட்ஸ் மின்சாரம் பெறமுடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“ இந்த பைலட் திட்டத்தின்படி, ரயிலில் ஏ.சி. பெட்டியை தவிர பிற பெட்டிகளின் மேல்பகுதியில் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். தற்போதைய சோதனையில் ரயில் பெட்டியில் பொறுத்தப்பட்டு உள்ள சோலார் தகடு மூலம் 17 யுனிட்ஸ் மின்சாரம் ஒவ்வொரு நாளும் கிடைக்கிறது. இந்த வெற்றியைப் பொறுத்து மொத்த ரயிலி லும் சூரிய சக்தியைச் செயல்படுத்த விரைவில் முடிவு எடுக்கப்படும்,” என்று டிவிஷ்னல் ரெயில்வே மேனேஜர் அருண் அரோரா தெரிவித்து உள்ளார். சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெறப்படுவதால், ரயில்வே நிர்வாகத்தால் ஒரு ஆண்டுக்கு ஒரு பெட்டியின் மூலம் ரூ. 1.24 லட்சம் சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“ ஓடும் ரயிலில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய சக்தி இனி பயன்படுத்தப்படும், டீசலின் பயன்பாடு குறையும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்,” என்று அரோரா தெரிவித்து உள்ளார். ஆய்வுகளின்படி ரயில்களில் சூரிய சக்தியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் வருடத்திற்கு 90 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும் என்றும், 200 டன்னிற்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய திட்டத்தின்படி, வழக்கமாக ரயில்கள் டீசல் என்ஜின் மூலமாகவே இயக்கப்படும், ரயில்களில் உள்ள மின்னணு பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய சக்தியின் மூலம் நிறைவேற்றப்படும். ரெயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகளில் உள்ள விளக்குகள் மற்றும் காற்றாடிகள் இயங்குவதற்கான மின்சாரம் சோலார் தகடுகள் மூலம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சூரியசக்தியானது இந்திய ரெயில்வேக்கு சாத்தியமானதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது ரயில்வேயில் எரிபொருள் செலவுக்கான பில்லை குறைப்பது என்பது தெளிவாகி உள்ளது.
கடந்த 2013-14ம் ஆண்டில் மட்டும் இந்திய ரயில்வேயின் செலவினம் மதிப்பு ரூ. 1.27 லட்சம் கோடியில் 28,500 கோடியானது எரிபொருளுக்கானது ஆகும். வடக்கு ரெயில்வே அதிகாரியின் தகவலின்படி ரெயில் பெட்டியின் மேற்பகுதியில் 40 சதுரமீட்டர் காலியாக உள்ளது. இதில் 24 சதுரமீட்டர் பரப்பளவில் 12 சோலார் தகடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 19 சதுரமீட்டர் பரப்பளவில் சோலார் பேனலுக்கு தேவையான பிறசாதனங்களை வைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தியில்லாத சமையம் மாற்று ஏற்பாடு மூலம் தேவையைப் பூர்த்திசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எரிபொருள் விவகாரத்தில் இந்தியன் ரயில்வே மாற்றுப் பொருளை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது. மாற்றுப் பொருளாக சிஎன்ஜி, பயோடீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை இந்தியன் ரயில்வேயில் ஏற்கெ னவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. சி.என்.ஜி.யால் (Compressed natural gas) டெல்லி டிவிஷ்னலில் ராக்தோக்-ரேவாரி செக்ஷனில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதிலும் எரிபொருள் மற்றும் பணத்தைச் சேமிக்க இரட்டை எரிபொருள் முறை பயன்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment