Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, June 2, 2015


புற்றுநோய்க்கு புதிய மருந்து; 60 சதவீதம் பேருக்கு குணம் தெரிந்தது

PRINT   ·   T+  
புற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது
bbcபுற்றுநோய்க்கு புதிய மருந்து நம்பிக்கையளிப்பதாக கூறப்படுகிறது

புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறு மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் தோல்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது

புற்றுநோயை குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேமருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, மெலனோமா எனப்படும் முற்றிய தோல்புற்றுநோய் வகையினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதமானோரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக பிரிட்டனில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
இமியுனோதெரபி எனப்படும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் புற்றுநோயை எதிர்க்கும் சிகிச்சை முறைக்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. அதாவது, ஒருவரின் உடலில் இயல்பிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு சொந்த உடலிலுள்ள திசுக்களையே தாக்குவதை தடுப்பதற்கு இந்த மருந்துகள் பயன்படுகின்றன.
இந்த கண்டுபிடிப்பை முக்கிய முன்னேற்றம் என்று கூறியுள்ள முன்னணி புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஒருவர், கட்டிகளை குணப்படுத்துவதற்கான சிகிச்சைமுறையை மாற்றியமைப்பதற்கு அது உதவும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த சிகிச்சைமுறையின் பக்கவிளைவுகள் பற்றிய கவலைகளும் உள்ளன.

No comments:

Post a Comment