Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, July 26, 2015

இறால் மலாய் குழம்பு


என்னென்ன தேவை?

இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது),
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது),
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது),
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது),
தேங்காய் பால் - 1 கப்,
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?


முதலில் சுத்தம் செய்யப்பட்ட இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயில் பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் கடுகு பேஸ்ட், சிறிது உப்பு சேர்தது கிளறி, மீண்டும் குறைவான தீயில் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். இறுதியில் தேங்காய் பால் ஊற்றி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து, 7-8 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், இறால் மலாய் குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment