Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, July 23, 2015

வெண்டைக்காய் மோர் குழம்பு


வெண்டைக்காய் மோர் குழம்பு





தேவையான பொருட்கள்: 
புளித்த தயிர் - 1 கப் 
வெண்டைக்காய் - 4-5 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு... 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
வர மிளகாய் - 1 
தேங்காய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்


தாளிப்பதற்கு... 
கடுகு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை: 
முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயை போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, வெண்டைக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் தயிர் ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு அதில் மஞ்சள் தூள், வெண்டைக்காய் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment