Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 26, 2013

ஐஸ் கிரீம் தயாரித்தால் ஜில்லுனு லாபம்


Photo: ஐஸ் கிரீம் தயாரித்தால் ஜில்லுனு லாபம்

ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்படுவார்கள். விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். சளி தொந்தரவு உள்ளவர்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையிலான ஐஸ் கிரீம்கள்கூட தற்போது விற்பனைக்கு வந்து விட்டன. எனவே ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்Õ என்று கூறுகிறார் ‘பான்பான்Õ ஐஸ் க்ரீம் தயாரிப்பாளர் சீனிவாசன். அவர் கூறியதாவது: சொந்த ஊர் தூத்துக்குடி. சென்னையில் நவீன வசதிகள் கொண்ட ஐஸ் கிரீம் கடை ஒன்றில் சாப்பிட்டபோது, நாமும் இதுபோன்று துவக்கலாமே என்று யோசித்தேன். அதற்கான தொழில்நுட்ப அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றேன்.

7 ஆண்டுக்கு முன்பு நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ரூ.20 லட்சம் முதலீட்டில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஐஸ் கிரீம் கடை துவங்கினேன். படிப்படியாக லாபம் வந்தது. கடையின் உள் அலங்காரம், உபசரிப்பு முறை போன்றவை வாடிக்கையாளர்களை கவர வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காத, தொண்டைக்கு தொல்லை தராத ‘சாப்டிÕ ஐஸ் கிரீம்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது. 200 வகை சுவை கொண்ட ஐஸ் கிரீம்களை தயாரித்து விற்றோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் ஐஸ் கிரீம் விற்பனை கணிசமாக உயர்ந்தது.

பின்னர் கோவை நேரு ஸ்டேடியம், காந்திபுரம் மற்றும் ஈரோட்டில் கிளைகளை துவக்கினோம். 2 ஆண்டுக்கு முன்பு கோவை ராம்நகரில் ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கினோம். திருமணம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐஸ் கிரீம் சப்ளை செய்தோம். நேச்சுரல் ஐஸ் கிரீம் என்ற வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம். இது பழங்களையே ஐஸ் கிரீம் போல் தயாரித்து வழங்குவதாகும்.

சிறு மற்றும் பெரு நகரங்களில் உள்ள மேல்தட்டு குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் இளைஞர்கள் அன்றாடம் ஐஸ் கிரீம் சாப்பிடுவது வழக்கமாகி விட்டதால் புதுப்புது பிராண்ட் ஐஸ் கிரீம் தயாரித்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். தொழில் துவங்குபவர்களுக்கு ஆலோசனையும் வழங்குகிறோம்.
படங்கள்: பேச்சிகுமார்

தயாரிப்பது எப்படி?

சாப்டி ஐஸ்க்ரீம்

பாய்லரில் 200 லிட்டர் பாலை 40 டிகிரி சென்டிகிரேடில் கொதிக்க வைக்க வேண்டும். அதில் சர்க்கரை 25 சதவீதம், பால் பவுடர் 5, லிக்விட் குளுகோஸ் 2, ஸ்டெபிலைசிங் 1 முதல் 2, வெண்ணெய் 3 சதவீதம் சேர்த்து, 80 முதல் 90 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் 2 மணி நேரம் கொதிக்க வேண்டும். அதை சமச்சீராக கலக்கும் ஹோமோஜினேஷன் மெஷினில் கொட்டி ஒரு மணி நேரம் ஓட விட்டால் ஐஸ் கிரீம் பால் கிடைக்கும். பின்னர் அது, பைப் மூலம் மிருதுவாக்கும் ஏஜிங் வெட் மெஷினுக்கு செல்லும்.

5 சென்டிகிரேட் வெப்பத்தில் 6 மணி நேரம் ஓடவிட்டால் வெண்ணிலா கிரீம்  கிடைக்கும். வெண்ணிலா கிரீம்தான் அடிப்படை. இதை குளிர்சாதனம் பொருத்திய சாப்டி மெஷினில் கொட்டி அரை மணி நேரம் காத்திருந்தால் மைனஸ் 5 டிகிரியில் சாப்டி ஐஸ் கிரீம் ரெடியாகும். அதை குழாய் வழியாக கப் அல்லது கோனில் பிழிந்து, அதன் மேல் ஸ்ட்ராபெரி, பட்டர் ஸ்காட்ச், பிளாக்கரன்ட் போன்ற பல்வேறு சுவையுள்ள எசென்ஸ்களில் ஒன்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு ஊற்றினால் குறிப்பிட்ட சுவையுடைய சாப்டி ஐஸ் கிரீம் கிடைக்கும்.

ஹார்டு ஐஸ் க்ரீம்

வெண்ணிலா கிரீமை கப் அல்லது கோன் ஆகியவற்றில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் மைனஸ் 30 டிகிரி அளவுக்கு உறைய வைத்தால் ஹார்டு ஐஸ் கிரீம் தயாராகும். ஹார்டு ஐஸ் கிரீம்கள் ரெடிமேடாக விற்கத்தக்கவை. குளிர்சாதன பெட்டியில் (ஐஸ் ப்ரீஸர்) மைனஸ் 30 டிகிரியில் பாதுகாத்தால் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கலாம்.

முதலீடு

கிரீம் உற்பத்திக்கு தேவையான பாய்லர் மெஷின் ரூ.1.5 லட்சம், ஹோமோஜினேஷன் மெஷின் ரூ.2 லட்சம், ஏஜிங்வெட் மெஷின் ரூ.2 லட்சம், மெஷின்களை நிறுவ 20க்கு 60 அடி நீள, அகலமுள்ள  கட்டிடத்துக்கு அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம், ஐஸ் ப்ரீஸர் ரூ.15 ஆயிரம் என கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.85 லட்சம் தேவை.

உற்பத்தி செலவு: தினசரி 200 லிட்டர் கிரீம் தயாரிக்க ரூ.10 ஆயிரம் வீதம் மாதம் ரூ.3 லட்சம். வாடகை, மின்கட்டணம், ஊழியர்கள் 4 பேர் சம்பளம் ஆகியவற்றுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் என மாதம்தோறும் உற்பத்தி செலவுக்கு ரூ.3.5 லட்சம்.

துவக்கத்தில் கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ.9.35 லட்சம் வேண்டும்.

ஐஸ் கிரீம் பார்லர் மட்டும் வைக்க சாப்டி மெஷின் ரூ.3 லட்சம், இன்டீரியர் டெக்கரேஷன் ரூ.2 லட்சம். 10க்கு 20 அடி நீள, அகலமுள்ள கடை வாடகை அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம் என ரூ.5.5 லட்சம் தேவை.

பார்லருக்கு மாத செலவு மின்கட்டணம், 2 ஊழியர் சம்பளம், வாடகை ஆகியவற்றிற்கு மாதம் ரூ.20 ஆயிரம். விற்பனைக்குத் தேவையான வெண்ணிலா க்ரீம் 600 லிட்டர் ரூ.30 ஆயிரம். கப், கோன், ஸ்ட்ரா மற்றும் பல்வேறு வகை எசென்ஸ் ஆகியவை ரூ.5 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் தேவை. பார்லர் வைக்க துவக்கத்தில் ரூ.6.05 லட்சம் வேண்டும். உற்பத்தியோடு பார்லரும் சேர்த்து வைக்க ரூ.15.4 லட்சம் தேவை.

இயந்திரங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், உற்பத்தி பொருட்கள் பெரு மற்றும் சிறு நகரங்களிலும் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு

உள்ளூர் மற்றும் ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர், தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாப்டி ஐஸ் கிரீம் பார்லர்களுக்கும், பிரத்யேக பார்லர்களுக்கும் வெண்ணிலா கிரீம் விற்கலாம். சிறு மற்றும் பெரு நகரங்களில் புதிய கிளைகளை துவக்கி நாமே விற்பனை செய்யலாம். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு சப்ளை செய்ய மொத்த ஆர்டர் எடுக்கலாம். இதன் மூலம் 20 முதல் 30 சதவீத லாபமும், பார்லர் மூலம் விற்பனை செய்தால் 30 முதல் 40 சதவீதம் லாபமும் கிடைக்கும்.

பராமரிப்பு

ஒரு மணி நேர பயணத்தில் சப்ளை செய்யும் இடங்களுக்கு ஐஸ் ப்ரீஸர் மூலம் எடுத்து செல்லலாம். அதற்கு மேலான தூரத்துக்கு மைனஸ் 80 டிகிரி வெப்பநிலை நிலவும் வகையில் டிரை ஐஸ்களை, பெட்டிகளை சுற்றி வைத்து கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் ஐஸ் கிரீம் உருகாமல் இருக்கும். ஐஸ் உருகிவிட்டால் அதில் பாக்டீரியா உருவாகும். பின்னர் மீண்டும் ப்ரீஸரில் வைத்தாலும், சாப்பிடுபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சளி பிடிக்கும். தொண்டை கரகரப்பு ஏற்படும்.

வெப்பநிலை முக்கியம்

ஐஸ்க்ரீமில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சக்தி அளிக்க கூடியது. பொதுவாக ஐஸ்கிரீம் உடலுக்கு உஷ்ணம் தருபவை. அவற்றை குளிர் மற்றும் மழை காலத்தில் சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும். ஹார்டு ஐஸ் கிரீம்களை மைனஸ் 30 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்காவிட்டால் பாக்டீரியா உருவாகும் வாய்ப்புள்ளது. மைனஸ் 5 டிகிரியுள்ள சாப்டி ஐஸ் கிரீம்கள் அனைவருக்கும் பாதுகாப்பானது. குளிர், மழை காலத்தில் சாப்பிட்டாலும் சளி பிடிக்காது.
ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்படுவார்கள். விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். சளி தொந்தரவு உள்ளவர்கள், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையிலான ஐஸ் கிரீம்கள்கூட தற்போது விற்பனைக்கு வந்து விட்டன. எனவே ஐஸ் கிரீம் தயாரிப்பு தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்Õ என்று கூறுகிறார் ‘பான்பான்Õ ஐஸ் க்ரீம் தயாரிப்பாளர் சீனிவாசன். அவர் கூறியதாவது: சொந்த ஊர் தூத்துக்குடி. சென்னையில் நவீன வசதிகள் கொண்ட ஐஸ் கிரீம் கடை ஒன்றில் சாப்பிட்டபோது, நாமும் இதுபோன்று துவக்கலாமே என்று யோசித்தேன். அதற்கான தொழில்நுட்ப அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றேன்.

இந்தியாவில் இஸ்லாம்-6

ஆரியர்களுடைய வருகை

புத்த மதமும் சமண மதமும் இங்கு செல்வாக்கைப் பெற்றிருந்த போது மிக சிறுபான்மையினராக இருந்த ஆரியர்களின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. பிறகு வடபகுதிகளிலிருந்து ஏராளமான ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக வரவழைக்கப்பட்டனர். இவர்களுடைய வருகையால் இங்குள்ள ஆரிய சக்தி வலுப்பெற்றது.

முதலில் தங்களை வலிமைப்படுத்திய பின் ஆரியர்கள் அன்றைய ஆட்சியாளர்களை சூசகமாக அணுகி ஆட்சியாளர்களுக்கு ஆரிய வழக்கப்படி பல பட்டங்கள் நல்கி கவுரவித்தனர். இப்பட்டங்களின் பெருமையில் தம்மை பறிகொடுத்த ஆட்சியாளர்கள், ஆரியர் பக்கம் சாயத் தொடங்கினர்.

Monday, November 25, 2013

இப்படி ஒரு நீர்வீழ்ச்சியை எங்காவது பார்த்ததுண்டா?


விளாம்பழம்




விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

குப்பைக்கு போகும்... 50% உணவுப் பொருட்கள்...!


ஒரு பக்கம் உணவுக்காக கையேந்தி நிற்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறுபக்கமோ... உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள், தேவையில்லாமல் வீணடிக்கப்படுகின்றன. உற்சாக கொண்டாட்டங்கள்,நட்சத்திர உணவகங்கள், ஆடம்பர திருமணங்கள் என்று பல இடங்களிலும் இப்படி வீணடிக்கப்படும் உணவுகள்... காணும்போது கண்ணீரைத்தான் வரவழைக்கும்!

ஒளி உமிழும் ஓர் அதிசய உயிரினம்!



ஒளி உமிழும் ஓர் அதிசய உயிரினம்!

இரவில் ஒளிரும் மின்மினிப்பூச்சி

இயற்கையின் அதிசயங்கள் தான் எத்தனை எத்தனை? விந்தைமிக்க உயிரினங்களின் இயல்புகளை அறியும்போது நமக்கே சில வேளைகளையும் ஆச்சர்யத்தையும் அற்புத உணர்வையும் விளைவிக்கிறது அல்லவா? அந்த வகையில் இயற்கையில் ஒளி உமிழும் உடலமைப்பைப் பெற்ற இந்த மின்மினி பூச்சியும் சேருகிறது. பூச்சி வகைகளில் இது முற்றிலும் மாறுப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. இரவில் ஒளியை உமிழும்(ஒளிரும்) மின்மினிப் பூச்சிக்கு மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும்.? அது எப்படி ஒளிர்கிறது? நம் வீட்டில் ஒளிரும் மின்விளக்குகள் மின்சாரம் கொண்டுதானே ஒளிர்கிறது!. அப்படியானால் மின்மினிக்கும் மின்சாரம் தேவையா? தானே அந்த மின்சாரத்தை தயாரிக்கிறதா? எப்படி இப்படியொரு ஒளி உமிழும் அதியம் ஏற்படுகிறது? இத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்கிறது இந்த பதிவு.

கோவைக் குற்றாலம்


கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் 20 கோடி பேர்



புதுடெல்லி: இன்டர்நெட் பயன்படுத்துவதில் சீனா, பாகிஸ்தானை விட இந்தியாவில் இணையதள சுதந்திரம் அதிகம் என்று உலக வலை இணைய நிறுவனம் கூறியுள்ளது. உலக வலை இணைய நிறுவனம் 2009ம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ் லீ யால் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இணையதள உபயோகம் பற்றி ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. வெப் இண்டக்ஸ் எனப்படும் ஆய்வில் உலக நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவது, இணைய சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, இணையம் பயன்படுத்த கட்டுபாடுகள், தேடலுக்கு பொருத்தமான புள்ளிவிபரங்கள், அரசு அனுமதி போன்ற பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. 

மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்!

Photo: மெழுகுவர்த்தி தயாரிப்பில் ஜொலிக்குது லாபம்! 

மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.

படிப்படியாக தொழிலில் உள்ள நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன். முதலில் வீட்டுக்கு அருகில் உள்ள மளிகை கடைகளில் ஆர்டர்கள் பெற்று அதற்கேற்ப தயாரித்து விற்றேன். படிப்படியாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் உள்பட பல்வேறு இடங்களில் விற்க துவங்கினேன். தொழில் விரிவடைந்ததோடு நல்ல வருமானமும் கிடைத்தது. பிறகு மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினேன். தற்போது பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெறுகிறார்கள். வீட்டில் உள்ள பெண்கள் இத்தொழில் மூலம் தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது.  ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும்.

பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பின் கடன் தொகையில் 35 சதவீதமும், நகர்ப்புறமாக இருப்பின் 25 சதவீதமும், பெண்களுக்கு 35 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. ரூ.2 லட்சம் வரை வங்கிகளில் எந்தவித கேரண்டியும் கேட்பதில்லை. இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.

என்னென்ன தேவை?

பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு, காட்டன்நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, மெழுகு உருக்க அடுப்பு, அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய், கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல், தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.

தயாரிக்கும் முறை

கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும். சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

வெள்ளை கலரில் மட்டுமல்ல; எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். என்ன வண்ணம் தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ற கலர் கெமிக்கல்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மெழுகில் சேர்த்தால் வண்ண மெழுகுவர்த்தி கிடைக்கும்.

ரகங்கள்

லோக்கல், வெள்ளை, கலர், கப், சிலை, ஜெல் என ஏராளமான வகைகளில் மெழுகுவர்த்திகள் உள்ளன. லோக்கல் என்பது நீளமாக இருக்கும் மெழுகுவர்த்தியை குறிக்கிறது. ஒவ்வொரு வகைக்கும் அச்சுகள் உள்ளது. அவற்றின் மூலம் பல்வேறு வகைகளில் தயாரிக்கலாம்.

முதலீடு

1 கிலோ மெழுகு தற்போது கடைகளில் ரூ.95க்கு விற்கப்படுகிறது. அச்சு வாங்க ரூ.500, டிரே ரூ.100, தேவையான எரிபொருள், பக்கெட் ரூ.50, காட்டன் நூல் (திரி) ஒரு கிலோ ரூ.120, கை மெஷின் ரூ.300. எடை போடுவதற்கான எலக்ட்ரானிக்ஸ் தராசு ரூ.400 என மொத்தம் ரூ.1,600 இருந்தால் போதுமானது.

வர்த்தக வாய்ப்பு

உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அணுகி ஆர்டர்கள் பெற்று விற்கலாம். மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன. சர்ச்களிலும் ஆர்டர்கள் பெற முடியும்.

வருமானம்

ஒரு கிலோ மெழுகு ரூ.95க்கு கடைகளில் கிடைக்கிறது. இதை மெழுகுவர்த்தியாக தயாரித்து ஒரு கிலோ ரூ.120க்கு விற்கலாம். பெரும்பாலும் கடைகளுக்கு கிலோ கணக்கில் மட்டுமே விற்கப்படுவதால் ஒரு கிலோ விற்றால் ரூ.25 லாபம் கிடைக்கிறது. திரி தயாரிக்க பயன்படும் காட்டன்நூல், பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவும் குறைவு. ஒரு நாளைக்கு சாதாரணமாக 20 கிலோ வரை மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம். ஒரு கிலோவுக்கு ரூ.25 லாபம் கிடைக்கிற நிலையில் 20 கிலோவுக்கு ரூ.500 வரை வருமானம் கிடைக்கிறது. பேக்கிங் செலவு, பாலிதீன் கவர்கள், காட்டன் நூல் செலவு உள்ளிட்டவற்றை கழித்தால் ரூ.450 வரை உறுதியாக லாபம் ஈட்ட முடியும். ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்தால் மாதம் ரூ.13,500 வரை லாபம் ஈட்ட முடியும்.

டிப்ஸ்: திரி மூழ்காதவாறு தண்ணீரில் வைத்தால், 2 மணி நேரம் எரியும் மெழுகுவர்த்தி 3 மணி நேரம் எரியும்.

மெழுகுவர்த்தி தயாரிக்கும் கலை பழமையானது. அன்று தொடங்கி இன்று வரை மெழுகுவர்த்திக்கு மக்கள் மத்தியில் நல்ல கிராக்கி உள்ளது. வழிபாடு, மின்தடை நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். எனவே இதை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் வாழ்வே வெளிச்சமாகும்‘ என்று கூறுகிறார் ஈரோடு ‘அம்மன் கேண்டில் ஒர்க்ஸ்‘ உரிமையாளர் மகேஸ்வரி. அவர் கூறியதாவது: குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். மெழுகுவர்த்தி தயாரித்து விற்கலாம் என முடிவு செய்து 10 நாட்களில் தொழிலை கற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் இஸ்லாம்-5

வரலாற்றுத் தொடர்:5 – தோப்பில் முஹம்மது மீரான்

இருமதங்களின் அழிவு…!

கி.பி.52-ல் கிருத்தவமும் கி.பி.68-ல் யூத மதமும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வந்ததாக வரலாறு கூறுகின்றது. பிரச்சாரம் குன்றி நின்ற சமண புத்த மதங்கள் வெளியிலிருந்து வந்த மதங்களின் வளர்ச்சிக்கொப்ப மதமற்றம் திராவிட மக்களுக்கிடையில் வரைந்து பரவியது. ஆனால் கிருத்தவம், சமணம், புத்தம் இம்மூன்று மதங்களும் பரவியது போல் யூத மதம் இங்கு பரவவில்லை.

உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபமாக மீட்க !


சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.

எக்ஸெல்: டெக்ஸ்ட் டிசைன்


தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.

ஆக்கிரமிப்புகள், சில அனுபவங்கள்


கடந்த வாரம் செய்தித்தாள்களில் வந்த இரு செய்திகள் கவனத்தை ஈர்த்தன. முதல் செய்தி, கடந்த வெள்ளிக்கிழமையன்று உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் எவரும் நுழைய முடியாதபடி பார்த்துக்கொண்டது. இரண்டாவது செய்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களை அகற்றியது சட்டப்படி தவறில்லையென்று பேட்டியளித்தது.

Sunday, November 24, 2013

Kaaba when flooded. A very old picture.

Photo: Kaaba when flooded. A very old picture.

தயிரின் அற்புதங்கள்

Photo: தயிரின் அற்புதங்கள்

''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.' 

நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.

இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.

இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.


நன்மைகள்

வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.

தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.

உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.

கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'

Winter Sore Throat Tea

Photo: ~~~~~Winter Sore Throat Tea~~~~~~

Make sure you have some of this ready...great recipe for sore throats and chest colds

.....makes about 2 cups

1. Two lemons thoroughly cleaned and sliced
2. Two piece of ginger about the size of your pointer and middle finger together sliced into coin size pieces
3. Honey (about 1 cup-maybe more)

In a 12-16 oz. jar combine lemon slices and sliced ginger.
Pour honey (organic is best) over it slowly. This may take a little time to let the honey sink down and around the lemon and ginger slices. Make sure when the honey has filled in all the voids, there is enough to cover the top of the lemon slices.
Close jar and put it in the fridge, it will form into a "jelly". To serve: Spoon jelly into mug and pour boiling water over it.
Store in fridge 2-3 months.

Remember to Share.... Sharing is Caring....Make sure you have some of this ready...great recipe for sore throats and chest colds

.....makes about 2 cups

1. Two lemons thoroughly cleaned and sliced
2. Two piece of ginger about the size of your pointer and middle finger together sliced into coin size pieces
3. Honey (about 1 cup-maybe more)

வில்லங்கச் சான்று பெறுவது எப்படி?


Photo: புதிய தலைமுறை வார இதழ்  

வில்லங்கச் சான்று பெறுவது எப்படி?

நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்தச் சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய வில்லங்கச் சான்றிதழ் அவசியம். வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி, எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி போன்ற தகவல்கள் இங்கே.

வில்லங்கச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர், தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால் வில்லங்கச் சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

வில்லங்கச் சான்றிதழின் அவசியம் என்ன?
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விவரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்தச் சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தை வாங்குபவர்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வில்லங்கச் சான்றிதழில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

1.சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி.
3.பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்.
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்.
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்

இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். வில்லங்கச் சான்றிதழை வைத்தே தாய்ப்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும் உள்ள எல்லாப் பத்திரங்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்தச் சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்டு அடமானத்தில் இருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

வில்லங்கச் சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
 எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது சென்னை பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்தச் சொத்திற்கும் வில்லங்கச் சான்றிதழ் பெறலாம்.

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரயப்பத்திர விவரம் ஆகியன கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம் செய்ய வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரயப்பத்திர விவரம் முதலியவை கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

 எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும்?
பொதுவாக 13 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்தான் வில்லங்கச் சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.

    கட்டணம் எவ்வளவு?
    பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆன்லைனில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பத்திரப் பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987-ஆம் ஆண்டு முதல் சொத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே 1987-க்குப் பிறகான வில்லங்கச் சான்றிதழைப் பெறுவது எளிது. அதற்குமேல் வேண்டுமெனில் தேடி, கைப்பட எழுதித்தான் தருவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும்போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். கட்டண விவரங்களை http://www.tnreginet.net/igregn/webAppln/indexFee.asp இதில் தெரிந்துகொள்ளலாம்.

 பின்வரும் இணைப்பில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே.

தமிழில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1 ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 இந்த இணைப்பில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது உங்கள் முகவரிக்கும் அனுப்பச் சொல்லலாம். அதற்குரிய தபால் செலவை தபால் கிடைக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

    விண்ணப்பத்தின் நிலையறிய http://www.tnreginet.net/webecstatuspublic.asp என்கிற இந்த இணைப்பில் செல்லவும்.

    ஒவ்வொரு மாவட்டத்தின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் http://www.tnreginet.net/english/drolist.asp என்கிற இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை http://www.tnreginet.net/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    வில்லங்கச் சான்றிதழில் தெரிந்து கொள்ளமுடியாத சில தகவல்கள்:

    சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்கச் சான்றிதழில் வராது.

    1.11.2009-க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorneyயாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009-க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்கச் சான்றிதழில் வராமலும் இருக்கலாம்.
நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்தச் சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய வில்லங்கச் சான்றிதழ் அவசியம். வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி, எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி போன்ற தகவல்கள் இங்கே.

சிறு நீரகக் கல்

Photo: இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல.100 சதவிகிதம்
ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட்
தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும்.
சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள்
சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி
கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள்
இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால்,
அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும்.
காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும்
வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவை சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள்
பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட
கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம்.

இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. 

தகவல் - இணையம்இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

அதிசய பானம் - புற்று நோய் தடுப்புக்கு

Photo: அதிசய பானம் - புற்று நோய் தடுப்புக்கு 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிசய சிவப்பு : தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

A + B + C ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம்  அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் :

1. புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

2. கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது.

3. நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. 

4. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

5. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

6. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.

7. கண் மற்றும் பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

8. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

9. உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

10. முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.

11.  சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

12.  பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.

13. காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

எப்படி தயாரிப்பது :

இந்த பானத்தை தயாரிப்பது எளிது

காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1

மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.

காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருக வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம்.
தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகியதன் மூலம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீடோ என்பவர் குணமாகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம்.

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவிய பின்னரே அரைக்கவும் .

Sources:- http://www.naturalcuresnotmedicine.com/2013/08/miracle-drink-kills-cancer-cells-must-read.html#kSH5YbQPuDFHbtSv.99 , http://tamil.oneindia.in/art-culture/essays/2011/red-colour-fruits-vegitables-miracle-drink-aid0091.html மற்றும் விக்கிரவாண்டி-பக்கம்
முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடல் பசுக்கள்

கடல் பசுக்கள்..! டால்பின்கள் , திமிங்கலங்களை போல இல்லாமல் அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்கள் வேகமாக நீந்தத் தெரியாதவை.. கடல் பசுக்கள் மனிதர்களுக்கு அரிதாகத்தான் காணமுடிகின்றன..! டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்குமுதுகு துடுப்புகள் இல்லை. கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிப்பதில்லை.  மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுப்படுவதில்லை.

ஆந்திர ஊறுகாய்.. அமோக லாபம்



தினுசு தினுசாக வந்தாலும், நல்ல சுவை, தரம் உள்ள ஊறுகாய்க்கு என்றுமே கிராக்கி உள்ளது. தேடி வந்து வாங்குவார்கள். எலுமிச்சை, மாங்காய்,
நார்த்தங்காய் உள்ளிட்ட ஊறுகாய்களோடு, மருத்துவம் குணம்மிக்க புதுவகை ஊறுகாய்களை தயாரித்தால் நல்ல லாபம் பார்க்கலாம்Õ என்கிறார்கள் ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் சீனு மற்றும் ராஜூ. திருப்பூரில் 10 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் அவர்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி, எங்கள் சொந்த ஊர். அங்கு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தோம். பகுதி நேரமாக ஊறுகாய் தயாரித்து விற்றோம். 10 ஆண்டுகளுக்கு முன் சேலத்தை சேர்ந்த நண்பர், எங்களைப் பார்க்க வந்தார்.
நான் தயாரித்த புதினா ஊறுகாயை ருசித்த அவர், ‘சூப்பர் டேஸ்டா இருக்கு. இதை எங்கள் பகுதியில் தயாரித்து விற்றால் லாபம் சம்பாதிக்கலாம்‘ என்றார்.

இந்தியாவில் இஸ்லாம்-4

ஒரு புது மதத்தின் வருகையை ஏற்றுக் கொள்வதற்கு தென் இந்தியாவில் நிலவியிருந்த சாதமான சூழ்நிலை.

எ) ஆதிமக்கள்: இன்றைய கேரளம் உட்பட, மண்டைய தமிழகத்தில் ஆதிகுடிமக்கள் எனப்படுபவர்கள் இன்று நம் அரசால் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மக்களும் இன்று காடுகளில் தங்கிவரும் மலைவாசிகளுமாவார்கள். ஆதி திராவிடர்கள் என அழைக்கப்படுபவர்கள் இவர்களே ஆவர். மதங்களின் வருகைக்கு முன் இவர்களுக்கிடையில் ஒரு ஆட்சி முறையோ, சமூக சட்ட வரம்புகளோ யாதும் இல்லாமலிருந்தது. கேரளப் பகுதியை பொறுத்த மட்டில் செல்வாக்கு வாய்ந்த நாயர் வகுப்பினருக்குக் கூட எந்தவிதமான மதமும் இல்லாமதிருந்தது.

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

Photo: புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??
சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம் இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்ப ட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..? "
என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது.. இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! 
(படித்தது )


புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம் இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்ப ட்டு இருக்கு..

மாட்டுவண்டி :


Photo: மாட்டுவண்டி :
அழிந்து வரும் தமிழர்களின் அடையாள வண்டி
இரண்டு சக்கரங்களால் ஆன,
மரம், 'டயர்', மற்றும்
இரும்பைக்கொண்டு உருவாக்கப்பட்ட
ஒரு வண்டி. பல வித
விழாக்கள், அவசரப் பயணங்கள்,
உறவினர் வீடுகளுக்குச்
செல்தல் போன்ற
நேரங்களில்,மற்றும் பழங்கால
சரக்குப் போக்குவரத்து,
வேளாண்
விளை பொருள்கள் மற்றும்
பல்வேறுவகையான
பொருள்களை எடுத்துச்
செல்ல இவ்வண்டிகள் பெரும்
பயன் அளித்தன...
அஷ்வின் அழிந்து வரும் தமிழர்களின் அடையாள வண்டி
இரண்டு சக்கரங்களால் ஆன,
மரம், 'டயர்', மற்றும்
இரும்பைக்கொண்டு உருவாக்கப்பட்ட
ஒரு வண்டி.

Saturday, November 23, 2013

திருநெல்வேலி மாவட்ட இயற்கை சூழ்ந்த இடங்கள்


திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் பாண தீர்த்தம் போன்ற சிறு அருவிகள், அணைக்கட்டுகள், பறவைகள் சரணாலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.