
குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது. கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான். நிலத்தில்வாழும் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகைகளை மேய்ந்து கொண்டிருக்கும்.
கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதை கடல் பசுக்கள் விரும்புகின்றன,,! தாய்லாந்தில் நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக்களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. தாய்லாந்தில் நகரின் நினைவாக கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகக்கிடைக்கின்றன..! தாய்லாந்து மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது. மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை.. கடல் பசுக்களின் பற்களில் உள்ள வளையங்களைக் கொண்டு அவற்றின் வயதைக் கணிக்க முடியும்.
சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டையாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்யாத இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது. உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
No comments:
Post a Comment