Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 25, 2013

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் 20 கோடி பேர்



புதுடெல்லி: இன்டர்நெட் பயன்படுத்துவதில் சீனா, பாகிஸ்தானை விட இந்தியாவில் இணையதள சுதந்திரம் அதிகம் என்று உலக வலை இணைய நிறுவனம் கூறியுள்ளது. உலக வலை இணைய நிறுவனம் 2009ம் ஆண்டு சர் டிம் பெர்னர்ஸ் லீ யால் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இணையதள உபயோகம் பற்றி ஆய்வு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. வெப் இண்டக்ஸ் எனப்படும் ஆய்வில் உலக நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவது, இணைய சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, இணையம் பயன்படுத்த கட்டுபாடுகள், தேடலுக்கு பொருத்தமான புள்ளிவிபரங்கள், அரசு அனுமதி போன்ற பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது. 


இதில் 81 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் 100 புள்ளிகளுடன் சுவீடன் நாடு முதல் இடத்தை பிடித்தது. நார்வே 2ம் இடத்தையும் பிரிட்டன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. அமெரிக்கா 4ம் இடத்தில் உள்ளது. இந்தியா 56வது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 57வது இடமும் பாகிஸ்தானுக்கு 77ம் இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 20 கோடி. சீனா மற்றும் அமெரிக்காவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை முறையே 30 கோடி மற்றும் 20.7 கோடி. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் 32.4 சதவீதமாகவும், சீனாவில் 31.1, பாகிஸ்தானில் 10.4 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை 49.5 சதவீதம், அனுமதி 31.2 சதவீதம், புள்ளிவிபரங்கள் கிடைப்பது 22.6 சதவீதம் ஆக உள்ளது. சீனாவில் இணையதள பயன்பாட்டில் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை 5.3 சதவீதம், அனுமதி 31.2, புள்ளி விபரங்கள் கிடைப்பது 46.8 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தானில் நுழைவு 21.3, புள்ளிவிபரங்கள் கிடைப்பது 12.4, இணைய சுதந்திரம் 9.8 சதவீதமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment