எமது கிராமங்களில் அக்காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. மாமரம் போன்ற சில வகை மரங்கள் நன்றாக காய்க்காது போனால் தும்புத்தடியினால் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தடவுவார்கள், மாமரம் பூத்துக் குலுங்கும் காலத்தில் தும்புத் தடியின் தும்புப் பகுதியினால் பூந்துணர் உள்ள பகுதிகளை மெதுவாக தட்டித் தட்டி விடுவர்.
மாமரத்துக்கு ரோஷம் வந்து விடுமென்றும் அதன்பின்னர் மாமரம் நன்கு காய்க்கத் தொடங்குமென் றும் அன்றைய கிராமத்து பாமர மக்கள் நம்பினார்கள்.
மாமரமும் அவ்வாறே நன்கு காய்க் கத் தொடங்கும். அவர்களது நம்பிக்கை யும் வீண் போனதில்லை.
மாமரத்துக்கு ரோஷம் வந்ததற்குக் காரணம் என்ன?
விஞ்ஞான ரீதியில் கூறுவதானால் மாம்பூவின் மகரந்தச் சேர்க்கைக்கு தும்புகள் உதவியிருக்கின்றன. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் வாய்ப்பு குறைவாக இருந்ததால் மாமரம் காய்ப்பது குறைவாக இருந்தது. தும்புகளால் பரவலாக தட்டியதனால் மகரந்தச்சேர்க்கை நன்கு நடைபெற்று மாமரம் கூடுதலாகக் காய்த்துள்ளது.
No comments:
Post a Comment