உலகில் முதல்முறையாக இன்டர்நெட் இணைப்புடன் கூடிய டூத் பிரஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சாதாரண பிரஷ்ஷை போல இல்லாமல், இந்த அதி நவீன பிரஷ், ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நாம் எவ்வாறு வாயை சுத்தப்படுத்தியுள்ளோமென தகவல் அளிக்கிறது.
உலகின் முதல் இன்டர்நெட் அடிப்படையில் அமைந்த டூத் பிரஷ் என்ற பெயரை பெற்றுள்ள இதை பிரான்ஸை சேர்ந்த கோலிப்ரீ என்ற நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
இந்த அதிநவீன பிரஷ்ஷின் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் லாயிக் செஸ்ஸாட், பல வருடமாகவே இந்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தாமல், விட்டு விட்டோம்.
இந்த டூத் பிரஷ்ஷில் ஒரு சென்சார் உள்ளது. அந்த சென்சார், நாம் பற்களைத் துலக்கும்போது, எந்த அளவுக்கு அழுக்குகளை வெளியேற்றியுள்ளோம் என தெரிவிக்கும். மேலும், நாம் எந்த அளவுக்கு பிரஷ் செய்துள்ளோம் என்பதையும் நமக்குக் காட்டும். அதை அடிப்படையாக வைத்து நாம் பிரஷ் செய்யலாம்.
இந்த பிரஷ்ஷை, வயர்லெஸ் மூலமாக ஒரு ஸ்மார்ட் போன் அப்ளிகேஷனுடன் இணைத்து அதன் மூலம் இந்த தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாமென தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சிறுவர்களுக்கு இந்த பிரஷ் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றார். பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகள் எவ்வாறு பல் துலக்குகிறார்கள் என்பதை கண்டறிய இது மிகவும் உதவியாய் இருக்குமென தெரிவித்தார்.
இந்த பிரஷ்ஷுக்கு தற்போது ரூ. 6100 முதல் ரூ. 12,436 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் இந்த பிரஷ்ஷை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும், இந்த பிரஷ்ஷுடன் இலவசமாக மொபைல் அப்ளிகேஷனும் அளிக்கப்படுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment