Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 19, 2014

மோர் குழம்பு செய்யும் முறை



தேவையான பொருள்கள் :

தயிர் - 100 மில்லி
வெண்டைக்காய் - 50 கிராம்
எண்ணெய் - 5 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அரைக்க :

சின்ன தேங்காய் - 1/2 மூடி (அ) 4 பத்தை
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
துவரம் பருப்பு - 4 தேக்கரண்டி (அரை மணி நேரம் ஊற வைக்கவும்)
பச்சை மிளகாய் - 5

செய்முறை :

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைக்கவும்.

பின் வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து 2 தேக்கரண்டி எண்ணெயில் நன்றாக வறுத்து கொள்ளவும்.

தயிரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மோராக மாற்றி அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை எண்ணெய் கலவையில் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து கொஞ்சமாக சுண்டியதும் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைத்துள்ள மோர் கலவையையும் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்.

சுவையான வறுத்த வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.

தயாரிப்பு : கனிமொழி

No comments:

Post a Comment