சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று பலருக்கும் தெரியும், ஆனால் அதனை எந்த விடயத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றுதான் தெரிவதில்லை.
வாந்தி எடுத்தவர்களுக்கு, வெறும் கடாயில் சீரகத்தைப் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்த கஷாயத்தைக் கொடுக்க வாந்தி நிற்கும்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை பழச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.
No comments:
Post a Comment