Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 19, 2014

ஸ்டஃப்டு மிர்சி சமோசா செய்யும் முறை



தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் (குடை மிளகாய்)- 4
எண்ணெய் - தேவைக்கு
ஸ்டஃப் செய்ய:
உருளை - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - சிறிது
உப்பு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி
எலுமிச்சை - பாதி

மேல் மாவுக்கு:

மைதா - அரை கப்
ரவை - அரை தேக்கரண்டி
சூடான எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு

செய்முறை :

உருளையை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

இதில் வேக வைத்த உருளை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும். எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து விடவும்.

மிளகாயின் ஒரு பக்கத்தில் மட்டும் கத்தியால் கோடு போட்டு உள்ளே இருக்கும் விதையை முடிந்தவரை நீக்கவும். பின் உருளை கலவையை வைத்து ஸ்டஃப் செய்யவும். மேலே எண்ணெய் ஆனால் டிஷூ பேப்பர் கொண்டு துடைத்து வைக்கவும்.

மேல் மாவுக்கு தேவையானவற்றை கலந்து பூரி மாவு பதத்தில் பிசையவும். இதை மெல்லியதாக திரட்டி ஒரு இன்ச் அளவு அகலம் உள்ள ரிப்பன்களாக வெட்டி வைக்கவும்.

மிளகாயின் காம்பு பகுதியில் கழுத்தை சுற்றி துண்டு போடுவது போல் மைதா மாவு ரிப்பனை சுற்றி நீர் தடவி ஒட்டவும். மிளகாய் மேல் எண்ணெய் இருந்தால் மைதா ஒட்டாது.

ஒரு சுற்றின் மேல் சிறிது ஓவர்லேப் ஆவது போல் அடுத்த சுற்று இருக்க வேண்டும். அப்படி ஓவர்லேப் ஆகும் இடத்தில் நீர் தடவி ஒட்டி கொண்டே சுற்றி வைக்கவும். மிளகாய் எங்கும் வெளியே தெரியாமல் சுற்றவும். ஒரு ரிப்பன் முடிந்தால் அடுத்த ரிப்பனை நீர் தடவி ஒட்டி தொடரவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்பைஸி ஸ்டஃப்டு மிர்சி சமோசா தயார். மிளகாய் காரமாக இருக்கும் என்பதால் உள்ளே வைக்கும் ஸ்டஃபிங் அதிக காரம் இல்லாமல் பார்த்து சேர்க்கவும். விரும்பினால் பீன்ஸ், கேரட், பட்டாணி எல்லாம் கலந்து செய்யலாம்.

தயாரிப்பு : வனி

No comments:

Post a Comment