பப்பாளியைப் பொறுத்த வரை,தமிழ் நாட்டில் 12 மாதங்களும் பரவலாக அதிக அளவில் விளையக் கூடிய பழமாகும். அதிக அளவில் கிடைக்கக் கூடிய பப்பாளி பழத்தைக் கொண்டு பல வகையான சுய தொழில்கள் செய்வதெப்படி என்பதைப் பற்றி இங்கு காணலாம்.
பப்பாளி
பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி
பப்பாளி உடனடியாகப் பரிமாறும் பானம்
பப்பாளி – அன்னாசிப்பழம் உடனடியாகப் பரிமாறும் பானம்
பப்பாளி ஊறுகாய்
பப்பாளி பழக்கூழ்
பப்பாளி பழக்குழம்பு
பப்பாளி டூட்டி ஃப்ரூட்டி
தேவையான பொருட்கள்:
முதிர்ந்த கனியாத பப்பாளி
1 கிலோ
சர்க்கரை
3/4 கிலோ
சிட்ரிக் அமிலம்
10 கிராம்
சாறு நிறம்
தேவையான அளவு
செய்முறை:
முதிர்ந்த பச்சையான பப்பாளியை அறுவடை செய்யவும், பின் அதை வெட்ட வேண்டும் மற்றும் பப்பாளிப் பாலை வடிகட்டவும்.
பழத்தை நன்றாக கழுவவும், தோலை உரிக்கவும், விதைகளை அகற்றவும், அகற்றிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2 % உப்பு நீரில் 1 % கால்சியம் குளோரைடு உள்ளது. இதில் 30 நிமிடங்கள் மூழ்க வைக்க வேண்டும்.
வடிகட்டிய பின் பப்பாளித் துண்டுகளை கழுவ வேண்டும். அதில் பப்பாளி துண்டுகள் உள்ள அதே அளவில் சர்க்கரையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
அறை வெப்ப நிலையில் 4 மணி நேரம் மூழ்க வைக்கவும். அதில் தேவையான அளவு சாறு, நிறம் மற்றும் சிட்ரிக் அமிலத்தை சேர்க்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள கலவையில் அதிக சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின் அந்த சர்க்கரை கெட்டியாகும் வரை 70 0 பிரிக்ஸ் வரை கொதிக்க வைக்கவும்.
கெட்டியான பழக்கற்கண்டு பப்பாளித் துண்டுகளை வடிகட்டி, ஒரு தட்டில் பரப்பி நிழலில் உலர வைக்க வேண்டும்.
பாலித்தீன் பைகளில் கட்டி, முத்திரையிட்டு சேமித்து வைக்கவும்.
பப்பாளி உடனடியாக பரிமாறும் பானம்
தேவையான பொருட்கள்:
பப்பாளி
1 கிலோ
சர்க்கரை
500 கிராம்
சிட்ரிக் அமிலம்
10 கிராம்
தண்ணீர்
2 லிட்டர்
பதனச் சரக்கு
1/4 தேக்கரண்டி
செய்முறை:
பப்பாளிப் பழங்களை நன்றாக கழுவவும், தோலை உரிக்கவும், விதைகளை அகற்றவும், பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அதனை கூலாக தயாரிக்கவும்.
தண்ணீரில் சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் சேர்க்கவும், நன்றாக கலக்கி சிறிது நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் குளிர வைக்கவும்.
சர்க்கரையை வடிகட்டி, பப்பாளிக் கூழுடன் கலக்கி பின் அந்த பழச்சாற்றை 80 0 செல்சியஸில் கொதிக்க வைக்கவும்.
சாறையும், பதனச்சரக்கையும் பழச்சாறுடன் கலந்து, தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் அடைத்து முத்திரையிட வேண்டும்.
புட்டியை நுண்ணயிரி வளர்ச்சித் தடை செய்ய 80 0 செல்சியஸில் வைக்கவும்.
பப்பாளி – அன்னாசிப்பழம் உடனடியாக பரிமாறும் பானம்
தேவையான பொருட்கள்:
பழக்கூழ்
1 கிலோ
சர்க்கரை
475 கிராம்
சிட்ரிக் அமிலம்
10 கிராம்
தண்ணீர்
2.8 லிட்டர்
கே. எம். எஸ் / எஸ். பி
200 மி. கி
செய்முறை:
பப்பாளிப் பழங்களை நன்றாக கழுவவும், தோலை உரிக்க வேண்டும்.
குடைவு அறுவைக் கருவியில் சதைப்பகுதியை எடுத்து அதைப் பழக்கூலாக தயாரிக்கவும்.
தண்ணீரில் சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டவும்.
பழக்கூழை நன்றாகக் கலந்து 80 0 செல்சியஸிற்கு சூடாக்கவும்.
புட்டியில் அடைத்தல் மற்றும் Crown Cork
தண்ணீர் தொட்டியில் 30 நிமிடங்கள் நுண்ணூட்ட வளர்ச்சியை தடை செய்ய வைக்க வேண்டும்.
குளிர வைக்கவும், அடையாள அட்டை வைத்து உபயோகிக்கும் வரை சேமிக்கவும்.
குறிப்பு
200 பிபிஎம் சோடியம் பென்சோயேட் அல்லது கே.எம்.எஸ் – ஐ சேர்க்கவும். அது தற்பொழுது மற்றும் நீண்ட நாள் சேமிக்கவும் உதவும்.
தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் மட்டுமே பழச்சாற்றை நிரப்ப வேண்டும்.
நுண்ணூட்ட வளர்ச்சியைத் தடைசெய்யும் பொழுது புட்டிகள் பாத்திரங்கள் பட்டு உடையாமல் பாதுகாக்க போதுமான அளவு துணிகளை இடையில் வைக்க வேண்டும்.
ஒரு மாற்றத்திற்காக உடனடியாக பரிமாறும் பானத்தை தயார் செய்ய பப்பாளிப் பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து தயாரிக்கலாம். பப்பாளியுடன் கலக்க ஏற்ற பழங்கள் மாம்பழம் மற்றும் அன்னாசிப்பழம் ஆகும்.
பப்பாளி ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
தோல் நீக்கிய பப்பாளித் துண்டுகள்
1 கிலோ
உப்பு
100 கிராம்
சிவப்பு மிளகாய்த் தூள்
10 கிராம்
ஏலக்காய் (பெரியது), சீரகம், கருப்பு மிளகுப் பொடி – அனைத்திலும்
10 கிராம்
காடி
750 மிலி
பப்பாளி ஊறுகாய் பதப்படுத்துதல் அட்டவனை
பப்பாளி பழக்கூழ்
தேவையான பொருட்கள்:
பப்பாளிக் கூழ்
100 கிராம்
சர்க்கரை
75 கிராம்
சிட்ரிக் அமிலம்
சிறிதளவு
செய்முறை:
பழுத்த பழங்களை தேர்வு செய்து நன்றாக கழுவவும் பின் தோலை உரிக்கவும், கூழை எடுக்க மின் அம்மியில் போட்டு அரைக்கவும்.
சர்க்கரையையும், சிட்ரிக் அமிலத்தையும் கூழுடன் சேர்த்து பழக்கூழ் பக்குவம் வரும் வரை சமைக்கவும்.
தொற்று நீக்கம் செய்யப்பட்ட புட்டியில் அடைக்கவும்.
5.பப்பாளி பழக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழக்கூழ்
1 கிலோ
சர்க்கரை
1.80 கிலோ
சிட்ரிக் அமிலம்
25 கிராம்
தண்ணீர்
1 லிட்டர்
பப்பாளி பழக்குழம்பு செய்முறை அட்டவனை
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.
No comments:
Post a Comment