Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 11, 2014

சுய தொழில்கள் சந்தன கம்ப்யூட்டர் சாம்பிராணி


கமகமக்கும் சந்தன கம்ப்யூட்டர் சாம்பிராணி
நெருப்புத் துண்டுகளில் சாம்பிராணித் தூள் தூவி புகைப் போடும் பழக்கம் இன்று கிராமங்களில் கூட மறைந்துப் போய்விட்டது. ‘கையில காசு வாயில தோசை என்பது போல் இந்த யுகத்திற்கேற்ப கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் வந்துவிட்டன.
சுப காரியங்கலில் தொடங்கி பல நிகழ்ச்சிகள் வரை கம்ப்யூட்டர் சாம்பிராணியின் மணம் கமகமக்கிறது. அதனால் கம்ப்யூட்டர் சாம்பிராணியில் பை நிறைய வருமானம் ஈட்ட முடியும். அதிலும் சந்தனத்தூள் கலந்து தயாரிக்கப்படும் கம்ப்யூட்டர் சாம்பிராணிகளுக்குத் தான் மவுசு அதிகம்.
இதனை முறைப்படி தயாரித்து விற்பனைக்கு அனுப்பினால் வீட்டிலிருந்தவாறே ஓய்வு நேரத்தில் மாதம் 7 ஆயிரம் வரை சம்பாதிக்க இயலும். ஆனால் இதற்கான மூலப்பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். இல்லேயேல் உங்கள் கம்ப்யூட்டர் சாம்பிரானிக்கு மார்கெட்டில் வரவேற்பு இருக்காது. குறிப்பாக சந்தனக்கட்டையில் விலையுயர்ந்த ஜாதி மரமாக பார்த்து வாங்க வேண்டும். தரம் குறைந்தது என்றால் வாசனையும் அவளவாக இருக்காது. இரண்டாவதாக உங்களிடம் கொள்முதல் செய்ய விரும்புவோரும் உங்களின் கம்ப்யூட்டர் சாம்பிராணியை தவிர்த்து விடுவார்கள்.
தயாரிப்பு முறை:
முதலில் சந்தனக் கட்டையை நன்றாக இழைத்துக் கொள்ளுங்கள். இதே போல் வெண் மரக்கட்டையையும் சந்தனக் கல்லில் வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்துக்கொள்ளுங்கள். இதனுடன் பன்னீர் சேர்த்து பிசையுங்கள்.
சிறிதளவு நீரை எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள் வண்ண தூளை கரைத்துக் கொள்ளுங்கள். மேலே நீங்கள் தயாரித்த கலவையில் ஊற்றி பிசையுங்கள். இதனை பூரிக்கு மாவு பிசைவதை போல பிசைந்துக் கொள்ளவும்.
தேவையான அளவு வில்லைகளாக அச்சில் வார்த்து காய வைக்கவும். காய்ந்தபின் லெமென் கிரேஸ் ஆயில், சந்தன எசன்ஸ் ஆகியவற்றுடன் ஆல்கஹாலை கலக்கவும். அந்தக் கரைசலை எல்லா வில்லைகளின் மேலே படும்படியாக தெளிக்கவும். பின் உடனடியாக இதனை பேக் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் வாசனை வெளியேராமல் தடுக்கப்படும்.
குறிப்பு:
வீட்டிலேயே சம்பாதிக்க வழிகாட்டும் கைத்தொழிலை எடுத்தவுடனே அதிக அளவில் தயாரிக்க வேண்டியதில்லை முதலில் பரீட்சார்த்தமாக சிறிதளவு ‘சாம்பிள்’ தயாரித்துவிட்டு அதன் தரம் எப்படி என்பதை அறிந்த பின்னரே அதிக அளவில் தயாரிப்பது தான் தரமானதாக இருக்கும். விலை மிக அதிகம் கொண்ட மூலப் பொருள்களில் மட்டுமின்றி எல்லாவித பொருட்களின் தயாரிப்பு முறைக்கும் இந்த வழிமுறையைக்கையாளவும்.
விபரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம்:
•போன்:9788876011, செல்:9442537190

No comments:

Post a Comment