தேவையான பொருட்கள்:
* வெள்ளை சூரை மீன் - பெரியதாக நான்கு
* மிளகாய்தூள் - இரண்டுகரண்டி
* மஞ்சள்தூள் - ஒருகரண்டி
அரைக்க
* பச்சைமிளகாய் - 50கிராம்
* பூண்டு - 10பல்
* மிளகு - இரண்டு தேக்கரண்டி
* மல்லி புதினா - தலா ஒருகைப்பிடி
* உப்பு - தேவையான அளவு
* வினிகர் - நான்கு கரண்டி
செய்முறை:
* மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்
* அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்
* மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
* பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்
* அவெனை 280 சூடாக்கி அதில் மீனை வைக்கவும்
* பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை
வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாறவும்
No comments:
Post a Comment