Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, June 27, 2015

மைசூர் போண்டா


மைசூர் போண்டா
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.

No comments:

Post a Comment