Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 30, 2012

மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்

இரத்தக்குழாய்களில் இரத்தம் உறைந்து கட்டியாக மாறுவது ஆபத்தானது. இரத்தம் கட்டியாக மாறும் திறனை குறைப்பதற்காக Heparin என்னும் வேதிப்பொருள் மருந்தாக பயன்படுகிறது. Heparin இரத்தக்கட்டிகளை கரைப்பதில்லை. ஆனால் இரத்தம் கட்டியாக உறையும் திறனை குறைக்கிறது. இரத்தக்கட்டிகளின் இருப்பிடம் மற்றும் தன்மைகளை ஆராய மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் தற்காலத்தில் ஊடுகதிர்படம் (medical imaging) எடுக்கப்படுகிறது. இரத்தக்கட்டிகளை துல்லியமாக கண்டறிய மின்மினிப்பூச்சிகளை ஒளிரச்செய்யும் என்சைம் பயன்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் தகவல்.

minmini_370சில உயிரிகள் தானாக ஒளியை உமிழும் பண்புடையவை. இந்நிகழ்வை உயிரியல் ஒளிர்வு (luciferase) என்றழைக்கிறோம். இது ஒளிர்தல், நின்றொளிர்தல் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டது. மின்மினிப்பூச்சியின் ஒளிர்தல் பண்பு உயிரியல் ஒளிர்வைச் சார்ந்தது. பூச்சிகளில் சுரக்கும் என்சைம்களுடன் சில வினையூக்கிகள் சேர்ந்து உருவாகும் வேதிப்பொருட்கள் உயிரியல் ஒளிர்வை நிகழ்த்துகின்றன.

உயிரி ஒளிர்தலை நிகழ்த்தும் வேதிப்பொருளின் புரதத்துடன், இதற்கென வடிவமைக்கப்பட்ட சாயப்பொருள் சேர்க்கப்பட்டு ஊடுகதிர்படம் எடுக்கப்படுகிறது. இந்த புதிய பொருளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஊடுகதிர் படங்கள் மிகத் துல்லியமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Heparin மருத்துவத்திற்குப் பிந்தைய ஊடுகதிர்படம் இரத்தப்புரதத்தில் உள்ள Xa (factor Xa) காரணிகளை தெளிவாகக் காட்டுகிறது. Heparin சிகிச்சையை தொடருவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க இந்த ஊடுகதிர் படங்கள் துணை செய்கின்றன.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/12/101208130040.htm

No comments:

Post a Comment