1. ஒரு வலைப்பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பக்கத்தில் மேலும் கீழும் செல்ல தயவு செய்து Mouse -ஐ பயன்படுத்தாதீர்கள்.. Space Bar-ஐப் பயன்படுத்துங்கள்.
2. ஸ்பேஸ்பாரைத் தட்டும்பொழுது அந்த பக்கத்தின் கீழுள்ள பகுதியைக் காட்டும்.
4. இதனால் மௌஸ், ஸ்குவாரல் வீல் பயன்படுத்துவதால் ஏற்படும் நேரய விரயம் தவிர்க்க முடியும்.
5. இணையப் பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்ப "Tab" விசையைப் பயன்படுத்துங்கள்..
6. படிவத்தில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டதிற்கு தாவ டேப் விசை எளிதாக இருக்கும்.
7. பாப்அப் பாக்சில் இருக்கும் பொதுவான தகவல்களை நிரப்ப எழுத்துக்களை தட்ட பழகிக்கொள்ளுங்கள்.
8. உதாரணமாக country என இருக்கும் படிவக் கட்டத்தில் I என தட்டினால் India என்பது உங்களுக்கு கிடைத்துவிடும்.
அதற்காக கீழ்விரிப் பட்டியை திறந்து அதிலுள்ள நாடுகளின் பெயர்களை ஒவ்வொன்றாக நீங்கள் கடக்க வேண்டியதில்லை..
அதேபோல State: என இருப்பதிலும் இதே முறையை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் Tamil Nadu எனில் T எழுத்தை அழுத்தினால் போதுமானது. பட்டியிலுள்ள Tamil Nadu என்பது உங்களுக்கு கிடைத்துவிடும்.
9. நீங்கள் பார்வையிடும் இணையப் பக்கத்தின் எழுத்தில் படிக்க முடியாத அளிவிற்கு சிறியதாக இருக்கிறதா? Ctrl விசையை அழுத்திக்கொண்டு + குறியை அழுத்துங்கள். உங்களுக்குத் தேவையான அளவு எழுத்தின் அளவு பெரிதாகும் வரைக்கும் நீங்கள் அழுத்தி, பிறகு அந்தப் பக்கத்தை பார்வையிடலாம்.
10. அதே போல் பெரியதாக இருப்பதாக நீங்கள் உணரும் இணையப்பக்கத்தின் எழுத்துருரவை குறைப்பதற்கு Ctrl விசையை அழுத்திக்கொண்டு - குறியைத் தட்டலாம்.
11. அதேபோல் கூகில் தேடல் என்பது வெறும் தேடலுக்கு மட்டுமல்ல.. அதில் பல பயனுள்ள விடயங்களும் உண்டு. குறிப்பாக ஒன்றை கூற வேண்டுமென்றால் அது ஒரு அகராதியாக பயன்படுகிறது. உங்களுக்குத் தேவையான வார்த்தையை Deifne
இதைப்போன்று எத்தனையோ பயனுள்ள விடயங்கள் உள்ளன. விரைவாக செய்து முடித்தல் என்பது சாதாரண விடயம்... அதையே சாமர்த்தியமாக செய்து முடித்தல் என்பதுதான் திறமை. இதுபோன்ற இன்னும் நிறைய விரைவாக செய்யக்கூடியன இருக்கின்றன.
No comments:
Post a Comment