Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, October 26, 2013

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்


கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம் மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1. ஸ்லீப் மோட் (Sleep mode): இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி. டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச் செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன் போட்டு நிறுத்துவது போல இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில் வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில் இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ "Standby” என்பது போலத்தான். சிறிய காலப் பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர் அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில்லை.

2. ஹைபர்னேட் (Hibernate): இந்த நிலையில், திறந்து வைத்து நாம் பயன்படுத்தும் டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட் டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன. மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிறது. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில், செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையிலும், அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம் இல்லை என்றாலும், இந்த நிலையையே பயன்படுத்த வேண்டும்.

3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep): மேலே 1 மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது, திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட் டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் மிகவும் குறைவான மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில் செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில், இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது. இதனை இயக்கியவுடன், இது உங்கள் கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப் நிலையில் வைக்கிறது.
இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய் இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது, மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில், விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அவற்றை எடுத்து இயக்குகிறது.

4. எப்படி பெறுவது?: Sleep மற்றும் Hibernate நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில் பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப் நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட் நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட் செய்திடும் ட்ரைவர் புரோகிராமை இறக்கி இயக்கவும்.
2. உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும், இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.

No comments:

Post a Comment