எந்த ஒரு முதலீடும் சில காலம் வரை தொடர்ந்து வருவாயைக்
கொடுத்துக்கொண்டே இருக்கும். இதனை பணப் புழக்கம் (Cash Flow) என்பர்.
உதாரணமாக, ஒரு கடன் பத்திரம்வாங்கினால், அதில் குறிப்பிட்டுள்ள வட்டி
விகிதம் (Coupon Rate),முக மதிப்புக்கு (Face Value) ஏற்ப வருடந்தோறும்
வட்டி வருவாய் வரும், அதே போல், அந்தக் கடன் பத்திரத்தின் முதிர்வு
காலத்தில், முக மதிப்பும் திரும்பக் கிடைக்கும்.
Sunday, November 17, 2013
AMWAY பகல் கொள்ளை
"AMWAY" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பண்றிங்களா?". இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் 'உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க' என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
Saturday, November 16, 2013
முதல் ஆய்வாளன் தமிழன்
மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :
ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.
கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .
ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.
கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .
பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள்.
பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாகிவிடுகிறது.
திரிபலா
இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.
முருங்கை வளர்ப்பு
கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு
நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.
நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையைக் கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாகத் தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கைக் கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களைக் குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.
பனை
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த பிரச்சனைகளை தவிர்க்க பலரும் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகமாக உள்ளது என்று டயட்டை மேற்கொள்கின்றனர்.
Friday, November 15, 2013
முதல் பெண்கள் வங்கி
முழுவதும் பெண்களால் நிர்வாகிக்கப்படும், “பாரதிய மகிளா வங்கி’யை, முன்னாள் பிரதமர், இந்திராவின் பிறந்த தினமான, 19ம் தேதி, மும்பையில், பிரதமர், மன்மோகன் சிங் துவக்கி வைக்கிறார்.
சிறந்த வலி நிவாரணிகள்..
ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
அதேப்போல் அத்துடன் உடலில் பல வலிகளும் அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம், போதிய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
கணினியின் வேகம் கூட்ட
கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள்..!
syscheckup-குறைந்த கொள்ளவே கொண்ட இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.
கணினியில் தேவையில்லாமல் சேர்ந்திருக்ககும் குப்பைப் போன்ற பழைய கோப்புகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கிற தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி, வேண்டாத Registry File-களையும் நீக்கித் தருகிறது இம்மென்பொருள்.
Thursday, November 14, 2013
அல்சர் அவதிக்கு விடிவு
இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.
புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.
அருநெல்லி
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுகளில் கூட, ருசி இல்லையயன்றால் அதனை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.
ஏனெனில் உணவை சுவையாக உட்கொண்டே நாம் பழகி விடுகிறோம். பிறந்த குழந்தை கூட தாய்ப்பாலின் ருசிக்கு மயங்கி பல மாதங்கள் வரை வேறு எந்த சுவையையும் விரும்பாமல் தாய்ப்பாலை மட்டும் உட்கொண்டு வருவதுண்டு. நாம் உண்ணும் உணவின் ருசியை மூளைதான் நமக்கு உணர்த்துகிறது என்றாலும், உணவின் தன்மையை நாக்கின் சுவை அரும்புகளே புரிந்துக் கொண்டு உணவின் ருசியை மூளைக்கு கொண்டுச் செல்கின்றன. நாக்கின் சுவை அரும்புகள் பழுதுபட்டால் உணவின் சுவையை உணர முடியாமல் சுவை நரம்புகள் தத்தளிக்கின்றன. இதனால் ருசியான உணவாக இருந்தாலும் கூட உணவை உட்கொள்ள பிடிக்காமல், உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது
அகத்தி
அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள்.
அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.
வெள்ளைப்படுதல் குணமாக:
சின்ன வயசுலயே சில பிள்ளைகளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாகி பாடாபடுத்தும். படிகாரம்னு ஒண்ணு இருக்குதுல்ல... அதை வாங்கி, மண்சட்டியில போட்டு நல்லா பொரிக்கணும். மாசிக்காயை தூளாக்கி, படிகாரம் எவ்வளவு இருக்கோ... அதே அளவுக்கு எடுத்துக்கிட்டு ரெண்டையும் கலந்துக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, வெண்ணெய் விட்டு கொழச்சி, காலைல ஒரு தடவை, சாயங்காலம் ஒரு தடவைனு சாப்பிடணும். 10 நாள்லயே குணம் கிடைக்கும். ஆனாலும், ஒரு மண்டலம் வரைக்கும் சாப்பிட்டு முடிக்கறது நல்லது.
Subscribe to:
Posts (Atom)




















