ரூ.125 கோடிக்கு விலை போகும் என எதிர்பார்த்த அரிய 'ஆரஞ்சு வைரம்' 222 கோடியை தேடித் தந்தது
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் கடந்த 13-ம் தேதி உலகின் அரிய வகை வைரங்கள் ஏலம் விடப்பட்டன. நெருப்பு வைரம் என்ற வகையை சேர்ந்த 'ஆரஞ்சு வைரம்' ஒன்றும் இந்த ஏலத்தில் பங்கேற்றது.
அரிய வைரங்களுள் ஒன்றாக கருதப்படும் இது தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. இதன் எடை 14.8 கேரட் ஆகும்.
14 கேரட் எடையை தாண்டிய வைரங்கள் கிடைப்பது அரிது என்பதால் இந்த ஆரஞ்சு வைரம் தனது விலை மதிப்பை நிர்ணயித்துக் கொள்வதற்காக உலகையே ஒரு சுற்று சுற்றிவந்து, நிபுணர்களின் சான்றுடன் மீண்டும் ஜெனிவாவை வந்தடைந்தது.
இது 17 மில்லியன் - 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த அதிர்ஷ்ட வைரத்தை சொந்தமாக்கிக் கொள்வதில் ஏலம் கேட்டவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதால் எதிர்பார்ப்பை எல்லாம் முறியடித்து 3 1/2 கோடியே 5 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 222 1/2 கோடி ரூபாய்) விற்பனையாகி இந்த 'ஆரஞ்சு வைரம்' சாதனை படைத்துள்ளது.
No comments:
Post a Comment