Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 8, 2012

நோன்பு கால சமையல்-6 அரபியன் முர்தபா

அரபியன் முர்தபா:
தேவையான பொருட்கள்
  • மைதா - 1/2 கிலோ
  • நெய் - 2 ஸ்பூன்
  • சோடா உப்பு – சிறிதளவு
  • வெங்காயம் - 2
  • கேரட் - 2
  • உருளை கிழங்கு - 1
  • இறைச்சி – கால் கிலோ
  • முட்டை - 3
  • பச்சை மிளகாய் - 1
  • பச்சை பட்டாணி - 1 கப்
  • கரம் மசாலா - 1ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\
  • கொத்தமல்லி-கொஞ்சம்
  • எண்ணெய் - தே.அளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
  • மைதா மாவில் உப்பு, சோடா உப்பு போட்டு நெய்யை சூடாக்கி ஊற்றி தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
  • ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி முதலில் பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் உருளை கிழங்கை போட்டு கொஞ்ச நேரம் வதக்கவும்.
  • பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இறுதியாக கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், வேக வைத்த பட்டாணி,இறைச்சி(கீமா) மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதில் எண்ணெய் தடவி வைக்கவும்.முட்டைகளை நன்கு அடித்து கலக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்..
  • ஒரு உருண்டை மாவை எடுத்து அதை சதுர வடிவில் ரொட்டி போல பரப்பி, அதன் நடுவில் செய்து வைத்திருக்கும் அடக்கத்தை கொஞ்சம் ரொட்டி முழுவதும் பரவலாக பரப்பி வைக்கவும்.
  • அதன் மேலே கலக்கி வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் ஊற்றவும்.
  • பின் கலவை வைத்த ரொட்டியை நான்காக சதுர வடிவில் மடித்து. பின் அவற்றை எடுத்து சூடாக்கிய தவாவில் கொஞ்சம் எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இதை சாப்பிடுவதற்கு தோதாக கத்தியால் குறுக்கும் நெடுக்குமாக கீறி விடவும்.
  • அதன் மேல் கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லித் தூவி பரிமாறவும். இதோ சுவையான அரபியன் முர்தபா ரெடி.
  • இந்த முர்தபாவை நோன்பு திறந்த பிறகு இரவினில் இரவு சாப்பாடாக சாப்பிடலாம்.

    குறிப்புகள்: மெஹர் சுல்தான்

No comments:

Post a Comment