சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது.
அதற்கான ஆய்வை வருகிற 2015 ம் ஆண்டு தொடங்க உள்ளது. அதற்காக எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.
அதில், டர்னிப் , துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது. இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த தாவரங்கள் செழித்து வளரும் பட்சத்தில் அங்கு மனிதனும் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோடி ஆராய்ச்சியாக தாவரங்கள் பயிரிடப்படுகிறது.
No comments:
Post a Comment