Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, February 18, 2014

மீத்தேன் எமன்!!

'காவிரி டெல்டா' என்றதுமே... அனைவரின்
கண்களிலும் குளுமையைக்
கொண்டு வந்து சேர்ப்பவை... அங்கே திரும்பிய
பக்கமெல்லாம் பசுமைக் கட்டி சலசலக்கும்
விவசாய பூமிதான்! ஆனால், இன்னும் சில
ஆண்டுகளில் இந்த விவசாய பூமியை, மீத்தேன்
எனும் எமன் முழுவதுமாக ஸ்வாஹா செய்யப்
போகிறது என்றால்... நினைத்துப்
பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது!
ஆம்... 15 லட்சம் ஏக்கர் நிலம்; 34 லட்சம் டன்
உணவு உற்பத்தி;
70 லட்சம் மக்கள்... எல்லாமே கேள்விக்குறியாக
ப் போகிறது!
முப்போகமும் செழிப்பாக விளைந்து,
கோடிக்கணக்கான மக்களுக்கு காலங்காலமாக
உணவளித்து வரும் அன்னபூரணிதான்...
டெல்டா விளைநிலங்கள். 'சோழவள
நாடு சோறுடைத்து’ எனப் பெருமிதப்படும்
அளவுக்கு அபரிமிதமான விளைச்சலை,
வாரி வழங்கும் இந்நிலங்களில்... நெல், வாழை,
கரும்பு, தினை, கம்பு, கேழ்வரகு எனச்
செழித்தோங்கும் பூமி.
உணவு உற்பத்திக்காகவே உருவானதுபோல...
கல்லணை தொடங்கி, பூம்புகார்
வரை பரந்து விரிந்து கிடக்கும், இதுபோன்ற
சமவெளி நில அமைப்பு, இந்தியாவில்
வேறு எங்குமே இல்லை எனலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்
தொழில்நுட்பத்தில்
தலைசிறந்து விளங்கியவர்கள், காவிரிக்
கரையோர உழவர்கள். கனமழைக்கு ஏற்றவை;
வறட்சிக்கு வளமாக விளைபவை;
உப்பு மண்ணுக்கு உகந்தவை; கரிசலுக்குக்
கச்சிதமானவை; செம்மண்ணில் செழிப்பவை;
மணல்சாரியிலும் மகசூல் கொடுப்பவை... எனப்
பகுத்தாய்ந்து, பல்வேறு வகையான நெல்
ரகங்களைப்
பாதுகாத்து பயன்படுத்தி வந்தவர்கள்.
மண்ணைப் பதப்படுத்துவதிலும்,
விதையை வளப்படுத்துவதிலும்
வல்லவர்களான இவர்கள், நேர்த்தியோடும்,
கலைநயத்தோடும் வேளாண் தொழில்
செய்தவர்கள்... செய்து கொண்டிருப்பவர்கள்!
ஆட்சி செய்த மன்னர்கள்... தொலைநோக்குப்
பார்வையுடன், நீர் மேலாண்மையில்
தனிக்கவனம் செலுத்தினர். தொடர் ஏரிகள்,
ஏராளமான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள
ை அமைத்து, அடுத்தடுத்தத்
தலைமுறைகளுக்கும் செழிப்பான
விவசாயத்தைக் கைமாற்றிக் கொடுத்தனர்.
ஆங்கில ஆட்சியின்போது கூட, விவசாயம்
மதிப்புமிக்கதாகத்தான் இருந்தது.
நாடு விடுதலை பெற்ற, அடுத்த
கால்நூற்றாண்டு வரையிலும்கூட இங்குள்ள
விளைநிலங்கள் மகிழ்ச்சியோடுதான் இருந்தன.
அதன்பிறகுதான் அடுக்கடுக்கான சோதனைகள்.
'பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் போடப்பட்ட
ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும்
மண் மலடானது. கர்நாடகா, காவிரி நீர் தர
மறுப்பதால், இங்குள்ள விளை நிலங்கள்
தாகத்தில் தவிக்கின்றன. ஏரி, குளங்கள்,
வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்... தண்ணீர்
தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
'இது விவசாய பூமி. இங்கு பெரிய அளவில்
தொழிற்சாலைகள் தொடங்கினால், காற்று, நீர்
மாசடைந்து, பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால்,
விவசாயம் தவிர
வேறு பணிகளை இப்பகுதிகளில் செய்ய
அனுமதி கொடுப்பதில்லை'
என்பதை மரபாகவே கடைபிடித்து வந்தனர்,
ஆட்சியாளர்கள். காலப்போக்கில்
இது கைவிடப்பட்டதால், ஏராளமான
தொழிற்சாலைகள் குவியத் தொடங்கி,
செழிப்பான டெல்டாவில்
ஆங்காங்கே இயற்கைக்கு எதிரான வேலைகள்
வேகமெடுக்கின்றன.
'பெட்ரோல் எடுக்கிறேன்' பேர்வழி என்று கடந்த
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய
அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. (எண்ணெய்
மற்றும் இயற்கை எரிவாயு கழகம்)
ஆங்காங்கே டெல்டா மண்ணைப் பதம் பார்த்தது.
தற்போது இறுதியுத்தமாக 'மீத்தேன்' என்கிற
பெயரில் விளைநிலங்களைச் சூறையாடும்
வேலை ஆரம்பமாகியிருக்கிறது. காவிரிக்
கரையோர
விளைநிலங்களை ஆங்காங்கே பிளந்து, மீத்தேன்
எமனை வெளியில் எடுத்துவிட பலர் துடித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இது நடந்தால் என்னவாகும்?
அறுவடை செய்யப்பட்ட தானியக்
குவியல்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும்;
கொடிய நோய்களை உருவாக்கக்கூடிய
விதவிதமான ரசாயனங்கள்,
டெல்டா மாவட்டங்கள் முழுவதும்
குவிந்து கிடக்கும்; எல்லா மாதங்களிலும்
வெப்பம் வெளுத்து வாங்கும்; இயற்கைச்
சீற்றங்கள் மற்றும் யுத்தகாலங்களில்
திறக்கப்படும் மருத்துவமனைகள் போல்...
பள்ளிகள், கல்லூரிகள் அவசரகால
மருத்துவமனைகளாக மாறும்;
விருந்தளித்து நெஞ்சம் மகிழும் நஞ்சைநில
மக்கள்,
ஒருவேளை உணவுக்கே அவதிப்படுவார்கள்;
புலிக்கொடி பறந்த மண்ணில், எலிக்கறிகூட
கிடைக்காத நிலை உருவாகும்; சுருங்கச்
சொன்னால்... சோழவள நாடு மட்டுமல்ல,
தமிழகமே சோற்றுக்குக் கையேந்தும்.
ஆம், தமிழகத்தின் நெற்களஞ்சியம்... ஆசியாவின்
சோமாலியாவாக அவதாரமெடுக்கும்!.
'தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்
எங்கயோ இருக்கு... நமக்கென்ன?''
என்று மேற்கு தமிழக மக்கள், மிரளாமல் இருக்க
முடியாது.
'மன்னார்குடியில்தானே மீத்தேன் எடுக்கிறார்கள்.
.. அதனால் நமக்கு என்ன பிரச்னை?' என தென்
தமிழக மக்கள், தெம்பாக இருந்துவிட முடியாது.
'அங்க அடிச்சா அங்கதான் வலிக்கும். 300
கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருக்கற
நமக்கு வலிக்காது' என வட தமிழக மக்கள்,
வருந்தாமல் இருக்கவே முடியாது.
ஆம்... வேரை வெட்டினால், ஒட்டுமொத்த
மரமும் கீழே சாயத்தானே செய்யும். மீத்தேன்
எடுப்பதற்காக, நிலத்தின் அடித்தளங்களைத்
தகர்த்தெறிவதால், நிலநடுக்கம் உருவெடுத்து,
நிலத்தடிப் பாறைகள் இடம்
பெயர்ந்து ஒட்டுமொத்த
தமிழ்நாடு மட்டுமல்ல... அக்கம்
பக்கத்து மாநிலங்களையும் ஆட்டம்
காணச்செய்யும்
ஆபத்து நிறையவே காத்திருக்கிறது!
எதார்த்தம், இதைவிட இன்னும் மோசமானதே!
இருபது ஆண்டுகளுக்கு முன் காவிரிப்
படுகையில், 'பெட்ரோல் எடுக்கிறேன்'
என்று ஓ.என்.ஜி.சி. தோண்டிய ஆழ்துளைக்
கிணறுகள், ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும்
அந்நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் மற்றும்
தொழிற்சாலைகள் அருகில் உள்ள கிராமங்கள்
மற்றும் விவசாய நிலங்களின் இன்றைய பரிதாப
நிலை... நாளைய மீத்தேன்
ஆபத்துக்கு ஒரு சாட்சி!
வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதால்,
பாசனத்தை இழந்த பலநூறு ஏக்கர் நிலங்கள்...
15 ஆண்டுகளுக்கு முன்பு, 15 அடி ஆழத்தில்
கிடைத்த நிலத்தடிநீர்... இன்று 200
அடி ஆழத்துக்கும் கீழ் சென்றுவிட்ட
கொடுமை...
நிலத்தடி நீரை ஸ்வாஹா செய்யும் கடல்நீர்...
சில ஆண்டுகளிலேயே டெல்டா முழுக்க குடிநீர்
காணாமல் போகும் ஆபத்து...
அடுத்தடுத்த ஆண்டுகளில் விவசாயத்துக்கும்
தண்ணீர் இல்லை...
அதன்பிறகு அழுவதற்குக்கூட கண்ணீரும்
இல்லை...
இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால்,
இனி தமிழக மக்களுக்கு எதிர்காலமே இல்லை....

No comments:

Post a Comment