மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று, புற்றுநோய். அது எந்த வகையிலும் மனிதர்களைத் தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்று நோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள், இஞ்சி போன்றவை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களில் சில என்று கூறப்படுகிறது.
இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. மஞ்சளும் இஞ்சியும் உணவுக்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம்.
இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் சோதனைக் குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையவை. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கின்றன. ஆனால் அவையெல்லாம் சோம்பேறிகளுக்கானவை.
மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப் பெட்டியில் வைக்க வேண்டாம், சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பச்சைத்தேயிலையில் எபிகலோ கேட்டசின் கலேட் மற்றும் கேட்டசின்ஸ் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களின் பரம எதிரிகள்.
நாளன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சைத் தேநீர் குடிப்பதில் கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத் தேநீர் தயாரிக்கும் போது பயனுள்ள வேதிப்பொருளான கேட்டசின்ஸ் இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
No comments:
Post a Comment