ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது சுவாசப் பிரச்சினையால் குறட்டை தோன்றும்.அருகில் படுத்து இருப்பவருக்கு குறட்டை எப்போதும் பெரிய பிரச்சினையாக இருக்கும்.குறட்டை விடும் பழக்கத்தால் வெளி நாடுகளில் டைவர்ஸ் ஆகி இருப்பதைக் கூட கேள்விபட்டு இருக்கின்றோம்.
இவ்வாறு பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் குறட்டை விடும் பழக்கத்தை தடுக்கும் விதத்தில் ஒரு தலையணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு மாறி படுத்தால் குறட்டை விடுவது நின்று விடும்.இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்து இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தலையணையில் உள்ள மைக்ரோபோன் குறட்டை விடும் சத்தத்தை கண்டறிந்தவுடன் இந்த தலையணை 3 இன்ச் அளவிற்கு பெருக்கமடையும்.இது ஒருவர் உறங்கும் நிலையை அன்னிச்சையாக மாற்றிக் கொள்வதற்கு போதுமானதாகும்.
Snore Activated Nudging Pillow என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த தலையணை 150 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment