உள்ள அனைத்து உணவு வகைகளிலும் என் ஃபேவரைட் இது தான். அதுவும் எங்கம்மா செய்து கொடுத்தால் ரொம்ப பிடிக்கும். இது கொஞ்சம் நீண்ட ப்ராஸஸ் என்பதால் அடிக்கடிலாம் செய்ய மாட்டோம், எப்பவாச்சும் அபூர்வமாக தான் செய்வோம். பொறுமையாக செய்து பாருங்க சூப்பரா இருக்கும்.
#செய்முறை
அரை கிலோ மைதா மாவில் ஒரு டம்ளர் மாவை தனியே எடுத்து வைத்து விட்டு மீதியை ஒரு ஸ்பூன் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து இதை பூரி சைஸ் உருண்டைகள் போட்டு பூரி போல உருட்டிக் கொள்ளவும்.
உருட்டிய பூரியின் மேல எண்ணெய் தடவி, சிறிது மைதா மாவு தூவி அதன் மேல் இன்னொரு பூரி வைக்கவும். மீண்டும் இதே போல்... இப்ப ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று பூரி இருக்கும். அனைத்தையும் இவ்வாறு மூன்று கொண்ட அடுக்குகளாக செய்யவும். பின்பு அதை அப்படியே உருட்டினால் பெரிதாக வரும். பெரிதாக உருட்டி அதை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வாட்டினால் மூன்றும் தனித்தனியாக பிரியும். பிரித்து வைத்துக் கொள்ளவும். இதற்கு பத்ர் எடுப்பது என்று சொல்வோம். மிக மெல்லியதாக செய்வதற்காக இந்த டெக்னிக்.
அடுத்து ஸ்டஃப்ஃபிங் செய்யணும். தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி கால் கிலோ
பட்டைகிராம்பு தூள் அரை ஸ்பூன்
மிளகாய் தூள் அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
எண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு
குக்கரில் எண்ணெய் விட்டு, எல்லாவற்றையும் போட்டு வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கணும்.
பெரிய வெங்காயம் மீடியம் சைஸில் 6
பச்சை மிளகாய் 4
கொத்துமல்லிதழை ஒரு கை
முட்டை 3
உப்பு
எண்ணெய்
கடாயில் எண்ணெய் விட்டு சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை எல்லாம் போட்டு வதக்கணும். வெங்காயம் வதங்கியதும் நான்கு முட்டைகளை அடித்து ஊற்றி கலந்து வேக விடணும்.
இதில் கொத்துக்கறி கலவையை சேர்த்து தண்ணீர் இருந்தால் சுண்ட வைக்கணும்.
பத்ர் எடுத்து வைத்திருக்கும் பரோட்டாவில் நடுவே இந்த கலவையை வைத்து இருபுறமும் மடக்கி, ஓரங்களையும் சிறிதாக மடக்கி மைதா பேஸ்ட்டால் ஒட்டவும். ரெண்டு ஸ்பூன் மைதாவை தண்ணீர் சேர்த்து குழைத்தால் மைதா பேஸ்ட் கிடைக்கும்.
அரை கிலோ மைதா மாவில் சுமார் 15 பரோட்டாக்கள் இது போல கிடைக்கும். இப்போ 5 முட்டைகளை உப்பு சேர்த்து நன்கு அடிக்கவும். ஸ்டஃப் பண்ணி வைத்திருக்கும் பரோட்டாக்களை முட்டையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு லேசாக சிவக்கும்படி சுட்டு எடுக்கவும். ஒரு முட்டைக்கு மூன்று பரோட்டாக்கள் என்ற விதத்தில் மீதி முட்டையை பரோட்டாவின் மீது ஊற்றவும்.
சுவையான முட்டை பரோட்டா ரெடி. இந்த அளவு நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு சரியாக இருக்கும். இதுக்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை. சாப்பிடும் போது எலுமிச்சை பிழிந்தால் சுவை கூடும்.
நன்றி:suhaina
No comments:
Post a Comment