Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, March 6, 2014

கதம்ப சாதம்


சுவையான, சத்தான கதம்ப சாதம் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1
கத்திரிக்காய் – 2
அவரைக்காய் – 5
பீன்ஸ் – 10
காரட் – 1


பூசணிக்காய் – சிறு துண்டு
பறங்கிக்காய் – 1 சிறு துண்டு
தனியா – 1 தேக்கரண்டி
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
வற்றல் மிளகாய் – 5
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிறு துண்டு
சாம்பார் பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை
சாதத்தை சிறிது குழைவாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். பிறகு சாம்பார் தயாரிக்க வேண்டும்.
தனியா, கடலைப்பருப்பு, வற்றல் மிளகாய், வெந்தயம், பெருங்காயம் இவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
முதலில் துவரம்பருப்பை தனியே வேக வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நறுக்கி தனியே வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை 3/4 கப் தண்ணீரில் கரைத்து, இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் அரைத்த பொடியையும், சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும். புளித்தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன், வேக வைத்து வைத்துள்ள பருப்பு, காய்கறிகளை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
சாதத்தின் மீது 1/2 கரண்டி நல்லெண்ணெய், 1/2 கரண்டி நெய் இவற்றை விட்டு நன்கு கலந்து மசித்துக் கொண்டு, குழம்பையும் கொட்டிக் கலந்து வைக்க வேண்டும்.
குழம்பு சேர்த்த பிறகு கரண்டியால் மசிக்கக் கூடாது. ஏனெனில் காய்கறிகள் உருத் தெரியாமல் குழைந்து விடும்.
குறிப்பு
மேற்சொன்ன காய்கறிகள் தவிர வாழைக்காய், சேப்பக்கிழங்கு, கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலம்.

No comments:

Post a Comment