ஜப்பான் நாட்டு மின்னணு பாகங்கள் தயாரிக்கும் டிடிகே நிறுவனம், மின்சார சார்ஜ்ஜர் இல்லாமல் வாகனங்களுக்கு வயர்லெஸ் சார்ஜ்ஜர் தயாரித்துள்ளது. இந்த தயாரிப்பு 2018-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சார்ஜ்ஜர் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கேபிள் அல்லது பிளக் எதுவும் இன்றி எளிதில் சார்ஜ் செய்ய இயலும். மேலும் கார்களை ஓட்டிச்செல்லும் போதும் சார்ஜ் செய்ய இயலும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. காந்த சுருள் தொழில்நுட்பத்தை வைத்து செய்யப்பட்ட கருவி ஆகும்.
இத் தொழில்நுட்பத்தை 10 சீமி தொலைவில் வைத்தும் பயன்படுத்தலாம். 2015 ஆம் ஆண்டு மாதிரி கருவி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்யோ நிறுவனம் இதை கார்களை ஓட்டிச்செல்லும் பொழுது பயன்படுத்தி சோதனை நடத்தியுள்ளனர். டொயோடா மற்றும் நிஸ்ஸான் நிறுவனம் இந்த வயர்லெஸ் சார்ஜ் அமைப்பை சோதனை செய்து வருகிறது.
No comments:
Post a Comment