பல் போனால் சொல் போச்சு என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில் பற்கள் தான் ஆரோக்கியத்துக்கான வாசல் என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில் பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக்காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்போது தான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை, மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும் பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலாசனைப்படி சுத்தம் செய்வது அவசியம்.
பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரல் பிரச்சனை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறார்களோ, அவ்வளவு துர்நாற்றம் வீசாது.
பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக்கொள்ளலாம்.
சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும். இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படுத் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால் ஈறின் நிறம் மாறும் என்பதால் எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம் என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.
செய்யக்கூடியவை.
தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப்பொருட்களை 'பிளாஸ்' கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிபட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம். பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கண் எரிச்சல், மூட்டு வலி, சருமப் பிரச்சனை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளலாம்.
செய்யக்கூடாதவை
கடினமான உணவுப்பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக்கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவுகளை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக்கூடாது.
புகை தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும். இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை பிளாஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஓவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.

No comments:
Post a Comment