பொதுவாக, ஃபிளாஸ்க் எனப்படும் வெப்பக்குடுவை அல்லது புட்டிகளில் வைக்கப்படும் திரவம் நீண்ட நேரத்திற்கு அதன் தன்மை மாறாமல் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கிறது.
வெப்பக்குடுவைகளின் உட்பகுதியின் மீது பூசப்பட்டிருக்கும் வெள்ளிப் பூச்சு, வெப்ப பரிமாற்றத்தை தடுக்கிறது. இந்த குடுவைகள் இரட்டைச் சுவர் கொண்டவையாக உள்ளன. இந்த இரண்டு சுவர்களுக்கும் இடையே உள்ள பகுதியில் காற்று இல்லாமல் வெற்றிடமாக இருக்கும். வெப்ப பரிமாற்றத்திற்கு காற்று அவசியம் என்பதால் குடுவையின் உட்புறத்தில் உள்ள திரவத்தின் வெப்பம் வெளியேறுவது இல்லை. அதைப் போலவே வெளியே இருக்கும் வெப்பமும் உள்ளே செல்வது இல்லை. இந்த குடுவைகளில் காணப்படும் ரப்பர் பொருத்தப்பட்ட மூடி வெளிப்புற வெப்பம் உள்ளே செல்வதை குறைக்கிறது. இதுவே திரவம் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நெடுநேரம் இருப்பதற்கு காரணம். வெப்பைக்குடுவையை 1892ஆம் ஆண்டு ஜேம்ஸ் டீவார் என்பவர் கண்டுபிடித்தார்.
No comments:
Post a Comment