Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, November 29, 2015

இன்றைய முகநூலில் என் பதிவுகள்(8)

எனது முகநூல் பக்கத்தை தொடர்ந்து படிக்க engr_sulthan ஐ லாக் ஆன் பண்ணி இணைந்திடுங்கள்..
#############################################################
லலித் மோடின்னு ஒருத்தர் இந்தியாவுக்கு அல்வா கொடுத்திட்டிருந்தாரே..என்ன ஆனார்??
நினைவிருக்கிறதா மக்கழே!
#############################

குப்பை தொட்டிக்கு அருகில் நின்று அடிக்கடி செல்ஃபி எடுத்துக் கொண்டால் சுத்தமான இந்தியா நனவாகும் என நம்புவோம்! -

##########################

ஒரு முஸ்லிம் மாணவனின் கடிகாரத்தையும் வெடிகுண்டாக பார்க்கும் பயம்,மனநோய் முற்றிய உலகம்

###############################

மாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26!
இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தவர்தான் ஹேமந்த் கர்கரே! தனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அராஜகங்களை கண்டு பொறுக்காமல் உண்மையான காவல் துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஹேமந்த் கர்கரே! மாலேகான் குண்டு வெடிப்பு, முதல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வரை உண்மை குற்றவாளிகள் யார் என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தவர். சாது பிரக்யாசிங், பார்பனரான புரோகித், அசீமானந்தா என்று வரிசையாக கைதுகளை தைரியமாக செய்து காட்டியவர்.
'நான் இந்து மதத்தை நேசிப்பவன்: எனது மதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகளை நான் எப்படி காணாதிருக்க முடியும். இந்துத்வாவாதிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது' என்று பேட்டி கொடுத்த சில நாட்களிலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார்.
நவம்பர் 26 ஆம் தேதி திட்டமிட்டு பாவிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தானிய தீவிரவாதிகள்தான் கொன்றனர் என்று செய்தியை திரித்து வெளியிட்டனர். அஜ்மல் கசாபுக்கும் ஹேமந்த் கர்கரேக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவரை மட்டும் குறி பார்த்து சுடுவதற்கு என்ன காரணம்? சுடப்பட்ட அந்த இடத்துக்கு அவரை கூட்டி சென்றது யார்? பாதுகாப்பு கவசம் அணிந்திருந்த நிலையிலும் அவரது உயிர் பிரிந்தது எவ்வாறு என்பது இதுவரை விடை தெரியாத கேள்வி. சில மணி நேரங்களிலேயே அவரது கவச உடையும் மாயமானது: இதை எல்லாம் நன்கு அறிந்திருந்த இவரது மனைவி மோடி கொடுத்த பண முடிப்பையும் வாங்க மறுத்து விட்டார்.
நம் வாழ் நாளிலேயே மிகச் சிறந்த தேச பக்தரை இழந்து விட்டோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தந்தருள்வானாக!
சுவனப் பிரியன்

###########################################################
ஒரு இஸ்லாமியர் தொடர்ந்து பொது ஊடகங்களிலும் ஒரு கட்சியின் மேடைகளிலும் இஸ்லாம் தடை செய்த மதுவை ஆதரித்து பேசி திரிகிறார்..
இவர் சாதாரண நபராக இருந்தால் விட்டு விடலாம்..
அவர் தேசிய லீக் என்றதொரு லெட்டர் பேட் கட்சியின் தலைவர் எனக் கூறிக் கோண்டு அதிமுகவின் அடிமையாக செயல்படும் சேக் தாவூத் என்பவர்...
இஸ்லாமிய மார்க்கத்தையும், அதன் கொள்கைகளையும் கொச்சைப் படுத்தி திரியும் இவரை இஸ்லாமிய மக்களும், அமைப்புகள், இயக்கங்களும் கடுமையாக கண்டிக்க வேண்டும்..
மது விலக்கு விஷயத்தில் முதலில் இவரைப் போன்ற நம்மவர்களை திருத்தி விட்டு பின் மற்றவர்களுக்கு அறிவுரை செய்வோம்...
செய்வீர்களா??


#########################################################
மோடியின் 'டிஜிட்டல் இந்தியா'வில் புனிதமாக கருதப்படும் மாட்டு மூத்திரத்தை சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலைகளில்கூட அதற்கான பாதுகாப்பு சாதனங்கள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் மலம், சாக்கடை சுத்தப்படுத்தும் தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் இந்தியா என்ன செய்தது?
இந்தியாவைப் பொறுத்தவரை துப்புறவு தொழிலாளர்களின் நிலை அபாயமானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை துப்புறவு தொழில் செய்வதற்காக மட்டுமே இந்து சமூக / அரசு நிர்ப்பந்திப்பது மக்களாட்சியின் சமத்துவத்திற்கே எதிரானது.
இந்தியாவின் நவீன தீண்டாமை முறை என்பது மீண்டும் மீண்டும் அதே துப்புறவு தொழிலாளியின் சந்ததியினரை அடுத்த துப்புறவு தொழிலாளிகளாக உருவாக்கவே தயார் செய்யும் சமூகச் சூழலை அவர்கள் மீது திணிக்கிறது. இதைத்தான் தோழர் அம்பேத்கர், 'அடிமைத்தனத்தைவிட, தீண்டாமை கொடுமையானது மட்டுமல்ல, கொடூரமானது' என்கிறார்...
தமிழச்சி












##########################################################
தந்தி கேள்விக்கென்ன பதில் நிகழ்வில் வெற்று வேட்டு பன்ருட்டியார் பதில் அளிக்கிறார்..
வெள்ள தடுப்பு நடவடிக்கையாகட்டும், ஏரி, குளங்கள் ஆக்ரமிப்பாகட்டும், மேம்பாலங்கள் ஆகட்டும் எதைக் கேட்டாலும் திமிராக, இது தான் எங்கள் வேலையா? என்கிறார்.. அதிகார வர்க்கத்தின் மேல் கூசாமல் பழி போடுகிறார்..
கடலூரில் மட்டும் 50 க்கும் மேல் உயிர் இழப்புகள் நடந்திருக்கிறேதே என்று கேட்டால், கேலியும், கிண்டலுமாக, பாதிக்கப் பட்ட மக்களை பிள்ளைப் பூச்சிகளை விட கேவலமாக நினைத்து கொஞ்சங்கூட மனசாட்சியில்லாமல் சிரிக்கிறார்..எள்ளி நகையாடுகிறார்..
இவரது சொந்த மாவட்டமான கடலூர் பக்கம் இவர் இனி போனால் மக்கள் துடப்பத்தோடு தான் வரவேற்பார்கள் இது உறுதி.
சென்னை பாதிப்புகளைப் பற்றி சென்னை மேயர் வாயே திறக்கவில்லையே என கேட்டதற்கு அவர் பேசாமல் இருந்ததில் என்ன பிரச்னை வந்து விட்டது என மமதையாக, எதேச்சதிகாரத் தோரனையில் பதில் அளிக்கிறார்..
ஆனாலும் மனுஷன் ரொம்ப நல்லவர் தான். சொல்லப்பட்ட அனைத்து குற்றச் சாட்டுகளையும் ஒத்து கொள்கிறார்...
சிரித்து சிரித்தே அதிமுக வின் காலை வாரி விடுகிறார் என்பது நிஜம்...


#######################################################
இவர முதல்ல இந்தியால இருக்க சொல்லுங்க அது போதும்


#############################################################
ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?
சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...
நம்புங்கண்ணே நம்புங்க.....

###########################################
55கோடி ரூபாய் செலவில் நடத்த திருமணம்,
தங்க நகையே இல்ல வெறும் வைர நகை மட்டும் தான்
பாவம் ரொம்ப ஏழைங்கப்பா இவங்க..
எங்கே...நம்ம பக்கத்து ஊரு கேரளாவுலதான்..



Engr Sulthan

1 comment:

  1. Do you realize there is a 12 word sentence you can communicate to your man... that will trigger deep emotions of love and instinctual attraction for you deep within his heart?

    That's because hidden in these 12 words is a "secret signal" that fuels a man's impulse to love, treasure and protect you with all his heart...

    12 Words Will Fuel A Man's Love Impulse

    This impulse is so hardwired into a man's mind that it will drive him to try harder than ever before to take care of you.

    In fact, triggering this influential impulse is so important to achieving the best possible relationship with your man that the second you send your man one of the "Secret Signals"...

    ...You'll immediately notice him expose his soul and mind for you in a way he's never expressed before and he'll see you as the one and only woman in the galaxy who has ever truly attracted him.

    ReplyDelete