#தாமிரபரணியின் தண்ணீர் யாருக்கு?
தமிழகம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாய் ஆறுகள், நீர்நிலைகள்.
தமிழகத்தின் வடக்கு தெற்காய், கிழக்கு மேற்காய்ப் பயணித்து, எத்தனைமுறை
நீர்நிலைகளைக் கண்டு வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி. வாழ்க்கை ஓட்டத்தை
மாற்றியமைக்கும் கற்பனைகள்.
நான் குறிப்பிட்டுச் சொல்லவிரும்புவது, தாமிரபரணி நதியைத்தான். அதன் பேரழகும் மிடுக்கும் துணிச்சலான பாய்ச்சலும் சொல்லி மாளாது. சீனிவாசனுடனும் நண்பர்களுடனும் பலமுறை தாமிரபரணியின் கரைகளை அளந்திருக்கிறேன். கம்பீரமாய் நிமிர்ந்து கரை கட்டி நிற்கும் மருதமரங்களின் வசீகரத்திற்கு அளவில்லை. வேறு எந்த நதியையும் இந்த அளவிற்குப் பழமையான, செழிப்பான மருதமரங்கள் அணிசெய்யவில்லை.
அதிலும் தாமிரபரணி ஆறு கிளைகளாய்ப் பிரிந்து கடல் சேரும் ஒய்யாரமும் உற்சாகமும் நம் உணர்வுகளுக்குப் புத்தம்புதியது. வாழ்க்கையில் ஒருமுறையேனும் பழைய காயல் வழியாகப் படகினுள் கடலுக்குச் சென்று வாருங்கள். அந்த அனுபவம் சொல்லில் முடிவதில்லை என்பது உங்களுக்கும் புரியும்.
ஆனால், இது எல்லாம் வெறும் பேச்சளவில் தான் எனும் அளவிற்கு வருத்தமான விடயம்: தாமிரபரணி கரையெங்கும் நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக்காகிதங்கள், பழைய துணிகள், திறந்த வெளியில் சிதறிக்கிடக்கும் மலம். எல்லா வகையான குப்பைகளும் முள்செடிகளும் அதன் கரையில் தான். வற்றாத ஒரு பெருநதியை இப்படியா நாம் அவலத்திற்குள்ளாக்குவது என்னும் அளவிற்கு அதன் கரையிறங்கி கால் நடக்கமுடியாத அளவிற்கு இன்னல்கள். அசுத்தங்கள். வேதனையாக இருந்தது.
அழகோ அழகு என்று ஓடும் நதியை இப்படியா எதற்கும் பயனில்லாது ஆக்குவது என்ற கவலை உடன் வந்தவர்கள் எல்லோரிடத்திலும் நிறைந்திருந்தது.
இந்த இலட்சணத்தில்,
ஆற்று மணல் அள்ளிச் செல்பவர்களுக்கு எதிராக நாம் களமிறங்கவும்,
பெப்சி கோலா கம்பெனிகள் நீருஞ்சி அழிப்பதற்கு எதிராக முழக்கமிடவும் நமக்கென்ன தகுதி இருக்கிறது என்று தோன்றுகிறது.

######################################################################################
13.09.2015 முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம்
வாகனம் வைத்திருப்பவர்கள் இதனைக் கட்டாயம் படியுங்கள் !
சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து
தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் , அத்துடன் முறையற்ற வகையில் செல்லும்
வாகனங்களை தடுத்து நிறுத்தும் அதிகாரமும் சாரதியின் உறுதிப்பத்திரம்,
வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்யும் அதிகாரமும்
வழங்கப்பட்டுள்ளது. இது தவிர வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள்
தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும்
அதிகாரம் உள்ளது. அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி
மூலம் கைப்பற்றப்படுமாயின் 14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக
அனுமதி பத்திரமும் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
-------------------------------------------
------- தண்டப்பண விபரம்- ----

*****சீட் பெல்ட் போடாமல் சென்றால் (Without Seat Belt ) Rs. 1000
*****புகை சான்று இல்லாமல் சென்றால் (Without PUC) Rs. 1500
*****இன்சுரன்ஸ் இல்லாமல் சென்றால் (Without Insurance) Rs. 10000
*****வாகன பதிவு சான்று இல்லாமல் சென்றால் (Without paper ) Rs.5000 +
****** ஒட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் (Without license) Rs.10000
********அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்கினால் (Mobile while driving) Rs. 5000
********3 முறைக்குமேல் அபராதம் விதித்தால் 2 மற்றும் 4 சக்கர ஒட்டுனர் உரிமம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.
********இதற்கு மேலும் அபராதம் வாங்கினால் குற்றமாக கருதப்பட்டு ஒட்டுனர் உரிமம் முற்றிலுமாக ரத்துசெய்யபடும்.
******* வாகனத்தில் செல்லும்போது ஒரிஜினல் சான்றுகளை எடுத்து செல்லவேண்டும் (All original papers should be taken along while Driving)

#####################################################################################
’’பல்வேறு அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன்
என்று அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை." - மத்திய உள்துறை அமைச்சர் #ராஜ்நாத்சிங்
சகிப்பின்மை குறித்து #அமீர்கான்
தெரிவித்த கருத்துக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்தி பேசிய பாஜக மத்திய
அமைச்சர் ராஜ்நாத்சிங், 'அம்பேத்கர் என்னென்ன காரணங்களுக்காக பல்வேறு
அவமானங்களை சந்தித்தார்' என்பதையும் கூறி இருக்க வேண்டும்.
ஆனால், அமீர்கான் என்பவரை #இஸ்லாமியர் என்ற குறியீடாகவும் அம்பேத்கரை இந்துக்களின் குறியீடாகவும் முன்நிறுத்தி இஸ்லாமிய எதிர்ப்பை மீண்டும் வலுப்படுத்துகிறார் ராஜ்நாத்சிங்.
#இஸ்லாமிய_எதிர்ப்பு மட்டுமே பாஜவுக்கு தெரிந்த அரசியல். அடுத்த தங்கள் பாசிசத்தை மறைக்க, தெரியாத வரலாறு அல்லது தெரிந்த வரலாற்றை தங்களுக்கு ஆதரவாக #இரட்டடிப்பு செய்து மோசடி அரசியல் செய்வது அடுத்த கட்டம்.
"விசாவுக்காக காத்திருக்கிறேன்" என்று #அம்பேத்கர்
எழுதிய சுயசரிதை நூலில் இந்துக்களால் பல்வேறு அவமானங்களைச் சந்தித்த
நிகழ்வுகளை அம்பேத்கர் நினைவு கூர்கிறார். அதனால்தான், "நான் பிறக்கும்
போது இந்துவாக இருந்தாலும் சாகும் பொழுது இந்துவாக சாகமாட்டேன்" என்று
புத்த மதத்திற்கு மாறினார்.
அதைவிட #தேசியம் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த கருத்தும் ராஜ்நாத்சிங் கூற்றுக்கு பொருந்தாது.
"தேசம் என்ற சொல்லின் உண்மையான பொருளில் இந்தியர்களின் தேசம் என்று ஏதுமில்லை. இனிமேல்தான் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். தனித்த வேறுபட்டதொரு சமூகத்தை ஒடுக்குவது ஒரு தேசத்தை உருவாக்கும் உபயமாகாது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்" என்று சொன்னவர் அம்பேத்கர்.
பாஜக என்ற இந்துமத / பயங்கரவாத கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்துவார்களானால் அவர்களைவிட அரசியல் கோமாளிகள் யாரும் இருக்க முடியாது.
Engr Sulthanஅதைவிட #தேசியம் குறித்து அம்பேத்கர் கொண்டிருந்த கருத்தும் ராஜ்நாத்சிங் கூற்றுக்கு பொருந்தாது.
"தேசம் என்ற சொல்லின் உண்மையான பொருளில் இந்தியர்களின் தேசம் என்று ஏதுமில்லை. இனிமேல்தான் அத்தகைய ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். தனித்த வேறுபட்டதொரு சமூகத்தை ஒடுக்குவது ஒரு தேசத்தை உருவாக்கும் உபயமாகாது என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்" என்று சொன்னவர் அம்பேத்கர்.
பாஜக என்ற இந்துமத / பயங்கரவாத கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக அம்பேத்கரை முன்நிறுத்துவார்களானால் அவர்களைவிட அரசியல் கோமாளிகள் யாரும் இருக்க முடியாது.
Your Affiliate Money Making Machine is ready -
ReplyDeletePlus, getting it set up is as simple as 1-2-3!
Follow the steps below to make money...
STEP 1. Choose affiliate products you want to promote
STEP 2. Add some PUSH button traffic (this ONLY takes 2 minutes)
STEP 3. See how the affiliate system explode your list and sell your affiliate products on it's own!
Are you ready?
Click here to launch the system