Saturday, October 4, 2014
காகா பழம் persimmon Fruit
இது என்ன பழம் என்று தெரிகிறதா?அரபு நாடுகளில் பரவலாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கக் கூடியது. பார்ப்பதற்கு தக்காளி போன்றே இருக்கும்..கலர் தான் மஞ்சள்..ருசியோ நல்ல இனிப்பு சுவை கொண்டது.
இதை சவுதி, துபாயில் காக்கா பழம் என்கிறார்கள்..
எனக்கு ரெம்பவும் பிடித்தமான பழம். சமீபத்தில் சார்ஜா போயிருந்த சமயத்தில் வாங்கி சாப்பிட்டேன்...
ஆங்கிலத்தில் இதன் பெயர் persimmon
முடக்கறுத்தான் ( Cardiospermum halicacabum )
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்
“சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”
– சித்தர் பாடல்-
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”
– சித்தர் பாடல்-
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து,
சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர்
தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை
உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
1,500 சதுரடியில் 50 வகை பயிர்கள்
மாநகர வாழ்க்கைக்கே உரிய பிரத்யேக பரபரப்பு... தடதட ஓட்டம்... என
துள்ளியோடிச் செல்பவர்கள்கூட, சென்னை, புரசைவாக்கத்தில் இருக்கும் அந்த
வீட்டைக் கடக்கும்போது சில வினாடிகள் நிதானிக்கிறார்கள். காரணம்...
மலர்கள், காய்கள், பழங்கள், செடிகள், கொடிகள் ஆகிவற்றோடு ஒரு குட்டி காடு
போல அந்த வீடு காட்சியளிப்பதுதான்! தெருவிலிருக்கும் அந்த அழகான
காட்டுக்குச் சொந்தக்காரர்... அமிர்தகுமாரி!
சித்த மருத்துவக் குறிப்புகள்
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
——————————————————————————–
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
——————————————————————————–
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
——————————————————————————–
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
——————————————————————————–
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
ஒரு வரி மருத்துவம்
ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.
பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
பால் + கசகசா : துõக்கம் வரும்
ஆப்பிள் வரலாறும், சத்துக்களும்.
ஆப்பிள் வரலாறு.
தற்போது விளைவிக்கப்படும்
ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி
இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான்,
தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது.
இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும்
Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும்
கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் ரகங்களை உருவாக்க
பயன்படுத்தப்படுகின்றன.
தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?
மூச்சிரைக்க
விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த
காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு
வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது.
வீட்டில் காய்ச்சி ஆறிய தண்ணீரைக் குடித்துவிட்டு வேறு
இடங்களுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள தண்ணீரைக் குடித்தால்,
அடுத்த நாளே சளிபிடித்துவிடுகிறது.
மினரல் வாட்டர் என்று பாட்டில்களில், கேன்களில்
கிடைக்கும் தண்ணீரைக் குடித்துப் பழகிவிட்டோம். உண்மையில் அதில் ஊட்டச்
சத்துக்கள் உள்ளனவா, சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் தண்ணீரில் உள்ள
சத்துக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையான நீரைத்தான் பருகுகிறோமா என்று
பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
நீரின் தன்மை பற்றி சென்னையைச் சேர்ந்த
பொது மருத்துவர் எழிலனிடம் கேட்டோம்.
'நம் உடலில் 50 முதல் 60 சதவிகிதம் வரை நீர்தான். ஒரு
மனிதனுக்கு சராசரியாகத் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்பது அவனுடைய உடல்,
வாழும் இடத்தின் சுற்றுச்சூழல், வேலை ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.
ஒருவருடைய உடல் எடையை வைத்து, அவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவைக்
கணக்கிடலாம். அந்தக் காலத்தில் இயற்கையிலேயே மூலிகைகள் கலந்த, சூரிய
ஒளிபட்ட, கிருமிகளை மீன் தின்று சுத்தம் செய்த நீரைத்தான் குடித்து
வந்தோம். அப்படிப்பட்ட சுத்தமான தண்ணீர், இன்று மனிதர் 
களால் மாசுபட்டுள்ளது. நம் நாட்டில், சுத்தமான
குடிநீர் என்பது வெறும் 33 சதவிகிதம் மட்டுமே. இதனால்தான் கிருமியால்
ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது'' என்றார் டாக்டர் எழிலன்.
நாம் பருகும் நீர் எப்படி சுத்திகரிக்கப்படுகிறது
என்பது பற்றி அக்வா டெக் சிஸ்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
மூர்த்தியிடம் கேட்டோம்... 'வீட்டில் பொருத்தப்படும் வாட்டர்
பியூரிஃபையரிலும், தண்ணீர் கேன் நிரப்பும் தொழிற் கூடங்களிலும் கிட்டத்தட்ட
ஒரே மாதிரியான தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படுகிறது. முதலில் கேண்டில்
பில்டர் என்று சொல்லப்படும் தொழில்நுட்ப முறையில், இயற்கை மாசு
வெளியேற்றப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. எதிர்சவ்வூடு பரவல்
தொழில் நுட்பத்தின்படி மைக்ரான் அளவிலான சவ்வு வழியாக சுத்திகரிக்கப்பட்ட
நீர் செலுத்தப்படுகிறது. அதையடுத்து கார்பன் ஃபில்டர் செய்யப்படுகிறது.
பின்னர் ஒரு மைக்ரான் சவ்வு வழியாகவும், அதனையடுத்து 0.0001 மைக்ரான்
அளவிலான சவ்வு வழியாகவும் அனுப்பப்பட்டு, தண்ணீரில் இருக்கும் மாசுக்கள்
அகற்றப்படுகின்றன. இப்படிக் கிடைக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமானது.
வீட்டில் பயன்படுத்தும் சில சுத்திகரிப்பான்களிலும்,
தொழிற்கூடங்களிலும் அல்ட்ராவயலட் கதிர்களால் சுத்திகரிப்பு
செய்யப்படுகிறது. இதன் மூலம் கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.
இந்த முறையில் இருந்து பெறப்படும் நீரின் பாதுகாப்பு மேலும்
உறுதிப்படுத்தப்படுகிறது.
கேன் நிறுவனங்களில் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் முறை
இந்தியத் தர நிர்ணய விதிகளை, சில நிறுவனங்கள்
முறையாகக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற கேன்களை
உபயோகப்படுத்துவதும் நடக்கிறது. சுத்திகரித்த தண்ணீர் சுகாதாரமற்ற
கேன்களில் சேரும்போது, மீண்டும் தண்ணீரின் தரம் கெட்டுவிடுகிறது.
காசு கொடுத்து வாங்கும் பாட்டில்களில் உள்ள தண்ணீர்தான்
மினரல் வாட்டர் என்று நினைக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. நாம்
வாங்கும் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் 'சுத்திகரிக்கப்பட்டுப்
பாதுகாக்கப்பட்ட குடிநீர்’ (packaged Drinking water) அவ்வளவு
தான். மினரல் வாட்டர் என்பது கனிமங்கள் சரியான அளவில் கலக்கப்பட்ட சத்தான
குடிநீர். ஒரு லிட்டர் தண்ணீரைத் தயாரிக்கவே 100 ரூபாய்க்கும் அதிகமாக
செலவாகும்' என்றார்.
'தண்ணீரைச் சுத்தம் செய்ய, பல நவீன வசதிகள் வந்து
விட்டாலும், அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்தப்
பயன்படுத்திய முறைகள், அவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல'
என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.
மேலும் அவர் கூறுகையில் 'தண்ணீரின் கடினத்தன்மையை
மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங்
கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும்
பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை
மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம்
வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப்
போட்டுவைப்பது வழக்கம். அல்லது, தேற்றாங் கொட்டைகளைப் பொடித்து, ஒரு
துணியில் கட்டி இறக்கிவிடுவார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள்.
கிணற்றில் மட்டுமல்ல, பானையில் கூட தேத்தா விதைகளைப் பொடித்து, துணியில்
கட்டிப் போட்டுவைக்கலாம்.இப்போதும் நம் வீடுகளில் வரும் நீர் கடின நீராக
இருந்தால், சம்ப் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் நெல்லிக் கட்டை
அல்லது தேத்தாங் கொட்டையைப் போட்டுவைக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
நீரைக் குடிக்கும் முறை
மோர் பெருக்கி, நீர் சுருக்கி, நெய் உருக்கி உண்பவர்தம் பேர் சொல்லப்போகுமே பிணி’ என்பது தேரையர் பாடல்.
நீர் சுருக்கி’ என்பது நீரைக் காய்ச்சி (அதாவது வற்ற
வைத்து) குடிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. எனவே, காய்ச்சிய
தண்ணீரைக் குடிக்கும் பழக்கமும் பாரம்பரியமாக இருந்துவந்ததுதான்.
அதிலும், செம்புப் பாத்திரத்தில் காய்ச்சிக் குடித்தால், உடலில் இருக்கும்
நிறமிகள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது.
தண்ணீர் சில மருத்துவப் பலன்கள்
காய்ச்சிய தண்ணீர் 
தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்’ என்கிறார்கள்.
தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, 99.9 சதவிகிதம் பாக்டீரியா, வைரஸ் போன்ற
கிருமிகள் அழிகின்றன. ஆனால், பலருக்கு Friday, October 3, 2014
மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!
மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!
தோட்டம்
வாங்கி, பண்ணை வீடு அமைக்க வேண்டும்’ என்பது பலருடைய ஆசையாக இருக்கும்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளால், வீட்டுக்குள்ளேயே
தோட்டம் அமைப்பதுதான் சாத்தியமாகி
விடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையை அடுத்த வானகரம் ராஜீவ் நகர்
ஸ்ரீதர். ஆனால், தன்னுடைய இந்த வீட்டுத்தோட்டத்தையே… பண்ணை வீட்டுத்
தோட்டத்துக்கு இணையாகப் பராமரிப்பதோடு… அதிலேயே ஏக சந்தோஷத்தையும்
அனுபவித்து வருகிறார் ஸ்ரீதர்.
வீட்டுக் கழிவு நீரில் செழிக்கும் செடிகள்!
2030-ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை
ஏற்படும், மத்தியக் கிழக்கு நாடுகளைப் போல இந்தியாவும் தண்ணீர் நெருக்கடி
நாடாக மாறும்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது, சர்வதேச தண்ணீர்
மேலாண்மை நிறுவனம். குளம், குட்டைகள், ஆறுகளை ஆழப்படுத்துவது ஒரு புறம்
இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு
நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத்
தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் மூலம் வீட்டுத்
தோட்டத்துக்குப் பாசனம் செய்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த
ஜெல்ஜோசப்.
ஆரோக்கியத்தின் அரண்மனை!
சென்னை
தேனாம்பேட்டை, முக்கால் கிரவுண்டு நிலத்தில் பச்சைப் பசேல் என கண்ணுக்கு
குளிர்ச்சியாக வீட்டுத் தோட்டம் நம்மை வரவேற்கிறது. போர்டிகோவை அடுத்து,
வேலி, காம்பவுண்டு சுவர், வாசல் கேட் என எங்கும் பசுமையின் சாயல். செடிகள்,
கொடிகள், பூக்கள் என மிக ரம்யமான சூழல். தொட்டியில் சிரிக்கும் சிவப்பு
ரோஜாக்கள். இப்படி, ஆரோக்கியத்தின் அரண்மனையாக வீற்றிருக்கிறது, உஷா
ஸ்ரீதரின் இல்லம்.
''தோட்டத்தினால் வீட்டுக்கு அழகு மட்டுமல்ல, உடல், மன
ஆரோக்கியத்துக்கு நல்ல மருந்தாக இருக்கிறது” என்கிறார் உஷா. ''சின்ன
வயசிலிருந்தே மரம், செடி, கொடிகளோடே வளர்ந்தேன். எங்க அப்பா ஒரு தோட்டப்
பிரியர். இங்கே வீடு கட்டியதும், முன்புறம் இருந்த மண் தரையில் முதலில்
லான் (பச்சைப் புல்வெளி), குரோட்டன்ஸ் மாதிரியான செடிகள்தான்
வெச்சிருந்தோம். ஆனால், அதெல்லாம் சும்மா அழகுக்குத்தான். வீணாக இடத்தை
அடைச்சிட்டு இருக்கோன்னு தோணுச்சு. வீட்டுக்கு உபயோகமா காய்கறி போட்டால்
என்னன்னு நினைச்சு, இப்ப அஞ்சு வருஷமா, காய்கறித் தோட்டத்துல இறங்கிட்டேன்.
அந்தந்த சீஸனுக்கு ஏத்த மாதிரி, காய்கறி விதைகளைப் போட்டு, தண்ணி
பாய்ச்சி, முழுக்க முழுக்க நானே பராமரிப்பேன்!
|
Thursday, October 2, 2014
திருநங்கைகள் மூன்றாம் பாலினமா?
|
அரசு, ஆலம், மாதுளை... குழந்தைப்பேறுக்கு கைகொடுக்கும் இயற்கை!
குழந்தை பாக்கியம் இல்லாம
நிறையபேர் கஷ்டப்படுறாங்க. இதுக்கு உடல்ரீதியா நிறைய காரணங்கள்
இருந்தாலும், ரசாயனம் கலந்த சாப்பாட்டை சாப்பிடுறதும் ஒரு காரணமா இருக்கு.
இதைச் சொன்னா பலபேரு நம்ப மாட்டாங்க. ஆனா, நம்ம உடம்புல வர்ற பல
பிரச்னைகளுக்கும் காரணமே... தினம் தினம் நாம சாப்பிடற சாப்பாடு, தண்ணி இது
ரெண்டும்தான்.
இதை உறுதிப்படுத்திக்க எங்கயும் போகத் தேவையில்ல... ஒவ்வொரு நாளும் காலையில எழுந்திருக்கும்போது உடம்பு சும்மா ஃப்ரெஷ்ஷா இருந்தா... பிரச்னையே இல்லை. இதுக்கு மாறா எழுந்திரிக்க முடியாம, கஷ்டப்பட்டு எழுந்திரிச்சாலும், தூக்கம் தூக்கமாவே இருக்கும் சிலருக்கு. காலைக் கடன்களை உடனே முடிக்காத நிலையும் இருக்கும். அதுக்கும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு கும்னு அடைச்சுக்கிட்டு இருக்கும். கண்ணு ரெண்டும் பொங்கிக்கிட்டு வரும். இதுமாதிரியான அறிகுறிகள் இருந்தா... நாம சாப்பிட்ட சாப்பாட்டுல ஏதோ பிரச்னைங்கிறத புரிஞ்சுக்கலாம். |
Wednesday, October 1, 2014
அரிசி வகைகளும் அதன் குணங்களும்
அரிசிகளில் சிலவகை இதோ உங்களுக்காக !!!
கருங்குருவை:
விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா:
இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்
கைகுத்தல் புழுங்கல் அரிசி:
low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
இதயம் காக்க... எளிய வழிகள்!
Tuesday, September 30, 2014
சர்வ நோய் நிவாரணி - விளாம்பழம்
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன.
விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன.
இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன்,
பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.
எலும்புகளை பலப்படுத்தும்: விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது.
எலும்புகளை பலப்படுத்தும்: விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது.
அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!
பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை
சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக்
காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச்
செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர
பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில்
இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும்
வெண்டைக்காயில் உள்ளன.
இதயத்தை பலப்படுத்தும் குங்குமப்பூ
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும்
நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு
நிறத்தில் காணப்படும். நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும்.
குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
நோய் எதிர்பு சக்தி நிறைந்த ஸ்ரோபெர்ரி
தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால்
மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவருக்கும்
தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது
எனக் கூறுவது உண்டு.
ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.
மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.
ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.
மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.
Monday, September 29, 2014
பெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உணவுகள்
ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில்,
ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால் ஏற்படும்
பெரும்பாலான பிரச்னைகளான கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல்,
மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை
ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை
சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக
சில தகவல்கள்…
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்:
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடும் பழங்கள்
இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.
அதிகம் பழங்கள் சாப்பிடுங்கள்
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை எல்லோரும் கட்டாயமாக பழங்கள் சாப்பிட வேண்டும் .பல விட்டமின் சத்துக்கள் இந்த பழங்களில் இருந்து கிடைக்கிறது . பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி பழங்களுக்கு உண்டு.
எல்லோரும் திராச்சை பழம் உண்ணலாம் . ஆனால் வாழைபழம் எல்லோரும் சாப்பிட மாட்டார்கள். தோடம்பழம் எல்லோரும் சாப்பிடலாம்.பப்பா பழம் எல்லோரும் சாப்பாட்டுக்கு பின் உண்டால் மிகவும் நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிடலாம். நமது ஊர்களில் என்றால் மரத்தில் இருந்து சும்மா விழுந்து கிடக்கும். சாப்பிட ஆக்கள் இல்லை. ஆனால் இங்கு பப்பா பழம் எண்பது ரூபாய் ஒன்று . ம்ம்ம்ம்ம் அது இருக்கட்டும் . இடத்துக்கு இடம் எல்லாம் வித்தியாசம் தானே.
ராக்கெட்களால் என்ன பயன்?
"தேசத்திற்கான புத்தாண்டு பரிசு!" ஜனவரி 5ஆம் தேதி இந்தியக் கிரயோஜெனிக் எஞ்சினுடன் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இப்படித்தான் உற்சாகமாக வர்ணிக்கப்பட்டது.
இந்த வெற்றிக்குப் பின்னே இருபது ஆண்டு கால உழைப்பு இருக்கிறது. இடையே ஏற்பட்ட தோல்விகளால் தளர்ந்துபோகாமல் நமது விண்வெளி விஞ்ஞானிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)













