Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, May 21, 2012

நவீன தொழில்நுட்பம்


நவீன தொழில்நுட்பம்

பெருகி வரும் வாகனங்களும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் நாம் எல்லாரும் அறிந்த விசயம்தான். அதிக வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் எரிபொருள் இழப்பு மிகவும் ஈடுகட்ட முடியாத ஓன்று. இயற்கை வளமான எரிபொருட்கள் குறைந்து கொண்டே வருவதால் அதற்கும் முடிவு காணவேண்டிய நிலையில் இந்த உலகம் உள்ளது.
இவைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் உலகமெல்லாம் ஈடுபட்டிருக்க , சீனாவை சேர்ந்த யூசா சாங் என்பவர் ஒரு புதிய நவீன வடிவமைப்பை கண்டுபிடித்துள்ளார். இந்த நவீன தொழில் நுட்பம் செயல்பட ஆரம்பித்துவிட்டால் சீனாவின் போக்குவரத்து நெரிசலும் சுற்றுப்புற சீர்கேட்டை கொண்டுவரும் புகையும் ( வாகனங்களால் வெளியிடபடுபவை ) கணிசமாக குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது.

இதுதான் அந்த நவீன தொழில் நுட்பம் . Straddling Bus என்று அழைக்கபடுகிறது. 18 அடி உயரமும் 25 அடி அகலமுமான ஒரு பேருந்து. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஓடுபாதை பயன்படுத்தப்பட போகிறது. இந்த பேருந்தின் மேல்தட்டில் மாத்திரம் பயணிகள் இருப்பார்கள். மேல்தட்டிற்கு கீழ் இருக்கும் சாலையில் மற்ற சிறு வாகனங்கள் சென்று வரும். படத்தை கூர்ந்து பாருங்கள். பேருந்தின் சக்கரங்கள் எப்படிவடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றும் எப்படி அதன் கீழ் வாகனங்கள் சென்று வருகிறது என்பதையும். இதனால் இந்த பேருந்தின் நிமித்தம் எந்த போக்குவரத்து இடைஞ்சலும் இருக்காது. சுமார் 1200 பேர் இதில் பயணிக்கும் சக்தி இருப்பதால் மற்ற பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. சுமார் 40 கிமீ வேகத்தில் செல்லும் இந்த பேருந்து 25 முதல் 30 சதவீத நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த பேருந்தை இயக்குவதற்க்கான சக்தி முழுவதும் பேருந்தின் மேல்பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடுகள் மூலம் பெறப்படும். பேருந்து நிறுத்தத்தின் கூரையிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டு அந்த சக்தியும் பேருந்துக்கு மாற்றப்படும். இந்த பேருந்தின் மூலம் சுமார் 40 சாதாரண பேருந்துகளை ஈடுகட்ட முடியும். எனவே வருடத்திற்கு சுமார் 860000 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும் என்றும் சுமார் 2640000 கிலோ கார்பன் நச்சு பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. ( நன்றி : நியூயார்க் டைம்ஸ் )

ரொம்ப அற்புதமான வடிவமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சாங் அவர்களுக்கு ஒரு "ஒ" போட்டு விட்டு , நமது சாலைகளிலும் இந்த தொழில்நுட்பம் வரும் நாளை நாம் எதிர்பார்ப்போம்.
தகவல்:கூடல்நண்பன்.blogspot

No comments:

Post a Comment