Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 20, 2012

இயற்கை பானம்.பதநீர்..பதநி கோலா

இயற்கை பானம்.பதநீர்..பதநி கோலா
எங்கள் ஊரைச்(குலசேகரப்பட்டிணம்) சுற்றிலும் பனங்காடுகள் தான் அதிகம். இதை விளையென்று கூறுவோம். நான் சிறுவனாக இருக்கும் போது பதநீர் சாப்பிட வேண்டுமென்றால் நண்பர்களுடன் நேராக விளைக்கு சென்று விடுவோம். எங்கள் உறவினர் ஒருவருக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனங்காடுகள் சொந்தமாக இருந்தது. அதில் அவர் கேரளாவிலிருந்து பனையேறும் தொழிலாளர்களை கூட்டி வந்து பதநீர் இறக்கி கருப்பட்டி செய்து வந்தார்.
அங்கு போனதும் எங்களின் தேவையைப் புரிந்து கொண்ட பனையேறும் தொழிலாளி ஒருவர் பனை ஓலையை மடித்து "பட்டை" (பதநீர் குடிக்க ஓலையால் செய்யப்பட ஓலை டப்பா )செய்து நம்மிடம் தந்து, அதில் பதநீரை ஊற்ற ஊற்ற நாம் மூச்சு முட்ட குடிக்க வேண்டியது தான். போதும் என்று சொல்லும் அளவுக்கு ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். அதில் கிடக்கும் தேனீக்களை வாயால் ஊதி ஒதுக்கி விட்டு, பதநீர் சாப்பிடுவதே ஒரு வகை கலை யென்று சொல்லலாம். இதற்கு எவ்வளவு காசு என்றா கேட்கிறீர்கள்? சும்மா...சும்மா தான். அது ஒரு காலம். இன்று அப்போது கிடைத்த கலப்பிடமில்லாத பதநீர் கிடைக்குமா என சொல்ல முடியாது. ரோட்டோரங்களில் பதநீர் என்று சீனி கலந்த பானத்தைத் தருகிறார்கள். காலை வேளை சாப்பிடும் போது பதநியில் நொங்கை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு குடிப்பதும், மாலை பதநி யென்றால் அதில் நன்கு பழுத்த மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவதும் வழக்கமான ஒன்று எங்கள் ஊரில்.
நேற்று என் நண்பர் ஒருவர், குளு குளு ஜூஸ் என்றெல்லாம் பதிவு போடுகிறீர்களே நம்மூர் இயற்கை பானம் பதநீர் பற்றி ஒரு பதிவு போடலாமே என்றார். நண்பரே இதோ பதிவு போட்டாயிற்று. மகிழ்ச்சி தானே!
Engr.Sulthan

பதநீர் எப்படி உருவாகுகிறதுஎன்ற "ரகசியம்' ?
"பனமரத்துக்கு கீழநின்னு பாலக் குடிச்சாலும் கள்ளுன்னுதான்நெனைப்பாக' என்ற சொல், இன்றளவும் உண்மைதான். இதனாலேயே கள் இறக்க தடை இருந்தபோதிலும், அதில் சுண்ணாம்பு சேர்த்து, பதநீராக தந்து கொண்டிருக்கின்றனர். உடலுக்குகுளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீரின் தயாரிப்புசுவாரஸ்யமானது. மதுரை மேலூர் அருகே ஓவாமலையில், ஓங்கி வளர்ந்த பனைமரங்களில் இருந்து ஆண்டுமுழுவதும், பதநீர் இறக்குகின்றனர்.
அந்த காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற "ரகசியம்' தெரியும். ஆனால் இக்கால தலைமுறையினருக்கு தெரியவாய்ப்பில்லை. அதை விளக்குகிறார், 20 ஆண்டுகளாக ஊர் ஊராக சைக்கிளில்பதநீர் விற்கும் மேலூர் ராஜ்.
""பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக.
பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம்பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'', என்றார்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடையகுழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்குஉள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
என்னதான் கூல்டிரிங்ஸ் இருந்தாலும், இயற்கையாக குளிர்ச்சியும், வலிமையும் தரும் எங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று ரோட்டில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும்பனை மரங்கள்.

அழிந்துவரும் பனை மரங்களை காக்க அரசு பதநீரை பதப்படுத்தி தயாரிக்குமா "பதநி கோலா "

அழிந்துவரும் பனைமரங்களை காக்க அரசு பதநீரை பதப்படுத்தி பாட்டிலில் அல்லது டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விட முயல வேண்டும் .சென்னை போன்ற பெருநகரங்களில் பிளாட்பாரங்களில் பதநீர் பாலித்தின் சிறு பாக்கெட்டுக்களில் விற்பதை காணமுடிகிறது .அதுபோல திருசெந்தூர் ,தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பரவலாக ,மண் பாண்ட கலசங்களில் வைத்து ,விற்கப்படுகிறது .இதற்காக அவர்கள் பனை ஓலையால் "பட்டை" (பதநீர் குடிக்க ஓலையால் செய்யப்பட ஓலை டப்பா )செய்து பதநீர் பருக வழங்கி வருகிறார்கள் .பெப்சி போன்ற மேல் நாடுகளின் இறக்குமதி பானம்.குடிப்பதற்கு ருசியாக இல்லை என்றாலும் கொக்கோ போன்றவை கலப்பு காரணமாக அவைகளும் விற்று போகின்றன .விலை போகின்றன .ஆனால் நம்ம ஊர் பதநீர் உடல் நலத்துக்கு நல்லது .மேலும் அனைத்து சத்துக்களும் அடங்கியது . பதநீர் பாட்டிலில், டப்பாக்களில் கிடைப்பது இல்லை .இது பனை மரத்தில் இருந்து இறக்கியதும் 8 மணிநேரம்தான் கெடாமல் இருக்கும் .அதற்குள் விற்கவேண்டும்.அவை விற்கவில்லையானால்,கொதிக்கவைத்து கருப்பட்டி செய்துவிட வேண்டும்.இவைதான் இயலும் .சுண்ணாம்பு போடப்பட்டது பதநீர் .சுண்ணாம்பு போடவில்லை என்றால் அது கள்ளாக மாறுகிறது .பதநீராக விற்க அரசு நடவடிக்கை எடுத்து விற்பனைக்கு விடலாமே.அதற்கு அரசு "பதநி கோலா "என்று பெயர்வைக்கலாமே ?.ஒருபனை மரம் வளர்க்க 10 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகள் ஆகும் .அதன் பின்னர்தான் பலன் தரும் .ஆனால் வரட்சி காரணமாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான பனை மரங்கள் பட்டு போயின .அதாவது அழிந்து போய் விட்டனஅதன்பின்னர்அவைவெட்டப்பட்டுசெங்கல்சூளைகளுக்கும்,வீடுகள் கட்டவும்,விறகாகவும் தான் பயன் பட்டன .ஒரு பனை மரத்தை வெட்டிஅழித்து விட்டால்,அதற்குப்பதில் உடனே மற்றொரு பனை மரம்உருவாக்க ,பனங் கொட்டைமுளைத்து வளர்ந்து பயன் கொடுக்க 12 ஆண்டுகள் ஆகும் .தமிழக அரசு பனை வாரியம் என்று ஒன்றை வைத்துள்ளது ஆனால் அது சரியாக செயல் படவில்லை .முந்தய திமுக அரசு இலக்கியசெல்வர் குமரிஆனந்தனை வாரியத்தலைவர் ஆக்கியது ஆனால் அது ஏற்றம் காண வில்லை .பனைவாரியம் மூலம் பனை ஏறும் எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை பயன்படுத்துவார் இல்லை.அவை எளிதான சாத்தியம் அற்றதாக போயிற்று .அரசும் கண்டு கொள்ளவில்லை .பனை மரம் ஏறுவதும் கணிசமாக குறைந்துவிட்டது .பனை மரங்களும் வேகமாக அழிந்து கொண்டு வருகின்றன ,பனை மூலம் ,பதநீர் ,பாய் ,இலக்கு ,ஈக்கு ,பிரஸ் ,கட்டில் நார் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன .இவைகள் போல . ,பதநீர் இறக்கா விட்டால் அவை நொங்கு வாக மாறி பயன் தருகிறது அவை பதப்படுத்தி பாக்கெட்டுக்களில் வைத்து "நொங்கு கேக்" என்று விற்கலாம் .இதனை அரசாங்கம் பதப்படுத்தி விற்க முன் வர வேண்டும் சொட்டுநீர் பாசனம் பனை மரத்துக்கும் மானிய விலையில் கடனுதவிஎளிதாக வழங்க வங்கிகளை அரசு அறி வுறுத்த வேண்டும் .இல்லைஎன்றால் பனைமரங்கள் அழிந்து போகும் .என்பது பேருண்மை .
டெட்ரா பேக் முறையில் பதநீர்

இயற்கையான சத்து மிகுந்த இந்த பதநீரைப் பல நாள்களுக்கு, ஏறத்தாழ 40 நாள்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள டெட்ரா பேக் முறையை முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது; இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவைகளும், வைட்டமின்களும் அடங்கியுள்ளதால் இயற்கையான ஊட்டச் சத்து நிறைந்த உணவாகக் கருதப்படுகிறது.
பதநீர் அருந்துவதால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடைகின்றன; பற்கள் உறுதிப்படுகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது; அம்மை நோயும் கண் நோயும் தடுக்கப்படுகின்றன; வயிற்றுப் புண் மற்றும் வயிற்றெரிச்சல் குறைகிறது; இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்பொழுது பாலிதீன் உறையில் அடைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.
இயற்கையான சத்து மிகுந்த இந்த பதநீரைப் பல நாள்களுக்கு, ஏறத்தாழ 40 நாள்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்துப் பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள டெட்ரா பேக் முறையை முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.

மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி செய்து நவீனமுறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனைவெல்லம் ஆகியவற்றையும் முதல்வர் கருணாநிதி இன்று (3.9.2010) அறிமுகப்படுத்தினார்.

பதநீரும் பிற பொருள்களும் இம்முறையில் விற்பனை செய்யப்படுவதன்மூலம் தமிழகம் முழுவதிலும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெற்றுப் பயனடைவதற்கு வழிவகுக்கும். இப்புதிய திட்டம் பதநீர்ப் பருவம் தொடங்கும் வரும் நவம்பர் மாதம் முதல் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இணையத்திலிருந்து...Engr.Sulthan

No comments:

Post a Comment