Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, May 20, 2012

கோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு

கோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு!

திராட்சைச் சாறு, கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை ரசம் அருமருந்து.
முலாம்பழத்தைச் சாறெடுத்து அருந்த உடல் உடனே குளிர்ச்சியாகும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட தண்­ணீர்(ஈரப்பதம்) அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை ஒருதடவை தினமும் அருந்தினால், கோடைவெப்பத்தை எளிதில் விரட்டிச் சமாளிக்கலாம்.
மாம்பழச்சாறு கோடை மயக்கத்தை நீக்கும். ஜூஸ் அல்லது ஸ்குவாஷ் தயாரிக்க, நார் அதிகமுள்ள இனிப்பு மிகுந்த மாம்பழத்தை உபயோகப்படுத்தலாம். இதில் ஜூஸ் அதிகம் இருக்கும். நாரை வடிகட்டிய பிறகு ஸ்குவாஷ் செய்யவும்.
நான்கு ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி அகற்றி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு மத்தினால் நசுக்கி விழுதாக்கிக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்­ணீர், 50கிராம் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் ஆகியவற்றைப்போட்டு நன்கு கலக்கி மெல்லிய துணியால் வடிகட்டிப் பருகலாம். வெயிலுக்கு உகந்தது.
இரண்டு முன்று பழச்சாறுகள் கலந்து ஜூஸ் செய்யும்போது, இரண்டு ஸ்பூன் இஞ்சிசாறு விட்டுப் பருகுங்கள். சுவை சூப்பராக இருக்கும்.
எலுமிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து, குளுகோஸ் மற்றும் தேன் கலந்து குடிக்க, சுவையும் கூடும். உடம்பிற்கும் நல்லது.
இளசான நுங்குகளை, தோல் நீக்கி கையிலேயே துண்டுகளாக்கி, (மிக்ஸியில் அடித்தால் பசைபோல் இருக்கும்) பால் சேர்த்து ஏலக்காய், சர்க்கரை கலந்து பிரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்து பருகலாம்.
இளநீரில் உப்பு எலுமிச்சை சாறைக் கலந்து புதினாவை நறுக்கி அதில் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் குடித்துப் பாருங்கள். குற்றால அருவியில் குளித்ததுபோல் இருக்கும்.
நீர்மோர் தயாரிக்கும்போது நீர்மோரில் இஞ்சி, பச்சை மிளகாய்க்குப் பதிலாக சிறிதளவு மிளகு ரசப் பொடியைச் சேர்த்துப் பாருங்கள். அதன் சுவையே தனி.
'ஐஸ்'க்காகத் தண்­ணீரை ப்ரீசரில் வைக்கும்போது சிட்டிகை உப்புத்தூள் கலந்து வைத்தால் ஜூஸில் கலக்கும்பொழுது அதன் இனிப்புச் சுவை கூடுதலாகத் தெரியும். தாகமும் அடங்கும்.
கோடையில் நீராகாரம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால், கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்­ணீர் ஊற்றும்போது, சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது.
புதினா, ரோஜா இதழ், செம்பருத்திப்பூ, சிறிதளவு பெப்பர்மின்ட் முதலியவற்றைப் பெரிய பாத்திரத்தில் போட்டு அது நிறைய குடிநீர் ஊற்றி கண்ணாடித் தட்டால் மூடி வெயிலில் காலை பத்து முதல் மதியம் மூன்று வரை வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி ஆற வைத்துக் குடித்தால் சூடு தணியும்.
கோடையைச் சமாளித்து உடல் நலம் காக்க எலுமிச்சை சாறு அடிக்கடி அருந்துவது நல்லது. எலுமிச்சம் பழச்சாறில் வைட்டமின் 'சி' நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு உடலுக்குள் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டு தோலில் அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து பளபள மேனியுடன் இளமை தோன்றத்துடன் காணப்பட உதவுகிறது.
வெள்ளரிக்காய்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி அதில் கொத்துமல்லி, இஞ்சி, வெட்டிவேர் மணக்கப்போட்டு உச்சி நேர வெயிலில் இரண்டு டம்ளர் பருகிப் பாருங்கள். உடல் 'குளுகுளு'வென இருக்கும். கோடை வெப்பத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்க வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசிய உப்பு உதவுகிறது.
குடிநீர் பானையில் சுத்தம் செய்த ஆவாரம் பூக்களைப் போட்டு வைத்து இந்நீரைக் குடித்தால், நாவறட்சி, நீங்கும். கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும்.
நன்றி:கூடல்.காம்
Engr.Sulthan

No comments:

Post a Comment