Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 22, 2012

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள்

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !!!


இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது. அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது.
இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த ஆபரணங்களுக்கு விடுமுறை கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .
த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம் ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.
இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு ‘பா‌ல் நெ‌க்ல‌ஸ்’-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையி;ல் .
‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.
பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.
தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை’ போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.
என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.




லண்டனில் கிடைக்கிறது தாய்ப்பாலில் ஐஸ்கிரீம்
ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாளர், (Matt O'Connor) 'மாட் ஓ'கோனர்' என்பவர் லண்டனில் 'கோவென்ட் கார்டன்' என்ற இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் நடத்திவருகிறார். இவர் நேற்று வெள்ளிக்கிழமை (25.02.11) முதல் 'பேபி ககா' என்ற பெயரில் தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் செய்து வியாபாரம் செய்கிறார். தாய்ப்பாலுடன், (Madagascan Vanilla Pod) 'மடகாஸ்கன் வேனில்லா பாட்' என்ற பழமும், எலுமிச்சம்பழத்தின் (Lemon zest) ஒரு பகுதியும் (பழத்திற்கும், தோலுக்கும் நடுவில் உள்ள பகுதி?) சேர்த்து செய்யப்படுகிறது. ஐஸ்கிரீமின் விலை 14 பவுண்ட்கள்.

Mother's forum என்ற தளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, தாய்ப்பால் தர சுமார் 15 தாய்மார்கள் இசைந்திருக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த விக்டோரியா HILEY, அவருடன் இணைந்து சில பெண்களும் தாய்ப்பால் தருகிறார்கள். என்னிடம் கூடுதலாக இருக்கும் பாலை பணத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு, நானே ஐஸ்கிரீம் சாப்பிட்டுப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்று HILEY சொல்கிறார். தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், அதன் சுவையையும் அருமையையும் வெளியில் சொன்னால், இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தயங்கமாட்டர்கள் என்றும் HILEY சொல்கிறார்.



தகவல்: இணையதளத்திலிருந்து

Engr.Sulthan

No comments:

Post a Comment