பெற்ற தாய்தந்தையை தவிர அனைத்துப் பொருட்களும் கலப்படமாக உள்ளது என்று கூறும் அளவுக்கு இன்று கடைகளில் வாங்கும் பொருட்களில் கலப்படம் கலந்துள்ளது. உப்பு முதல் உயர்ந்த தங்கம் வரை கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை. நுகர்வோர்களாகிய நாம்தான் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
மஞ்சள்தூள், மிளகாய்தூய், மிளகு, சர்க்கரை, பருப்பு என எல்லாவற்றிலும் கலப்படம் உள்ளது. இதனை தவிர்க்கவேண்டுமெனில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களையும், ஐ.எஸ்.ஐ. தரம் உள்ள பொருட்களையும் கேட்டு வாங்கவேண்டும்.
மிளகாய் தூள்
இது நம் நாக்கிற்கு சுவையை தரும் முக்கியமான பொருளாகும். காரம் சாப்பிடாதவர்களுக்கு வீரம் இல்லை என பழமொழியும் உண்டு. மிளகாய்தூளுடன் செங்கல்பொடியை கலந்து விற்பனை செய்யப்படுகிறது.
மிளகு
மலைப்பிரதேங்களில் விளையும் மிளகு ஏற்றுமதி தரம் வாய்ந்தது. மிளகுடன் பப்பாளிக்காயின் விதைகளை கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள்.
டீத்தூள்
இந்தியாவின் தேசியபானமாக டீ கொண்டாடப்படுகிறது. காலை முதல் இரவு வரை புத்துணர்ச்சியூட்டும் பானமாக இது திகழ்கிறது. மலைப்பிரதேசங்களில் பால் கிடைக்காவிட்டாலும்கூட கட்டஞ்சாயா என்றழைக்கப்படும் தேனீர் பருகி மகிழ்வர். இன்னும் சிலர் ஆரஞ்சு பழத்தை பிழிந்து விட்டு லெமன் டீ அருந்தி மகிழ்வார்கள். டீத்தூளை அடையாளப்படுத்துவதே கசாயம் தான். இந்த கசாயத்திற்கு இலவம் மரத்தின் பூக்களையும், இலவம் மரத்தின் நுனிமொட்டுகளையும் காயவைத்து 1க்கு 5 என்ற விகிதத்தில் அரைத்து டீத்தூளை விற்பனை செய்வார்கள்.
காப்பி
தேநீருக்கு அடுத்தபடியாக புத்துணர்ச்சிய்ஊட்டும் பானமாக திகழ்வது காப்பி. இந்த காப்பியை புளியங்கொட்டையுடன் கலந்து அரைத்து காப்பியாக விற்பனை செய்யப்படுகிறது.
அப்பளப்பு
பள்ளி சிறுவர்களின் பிரியமானவைகளில் ஒன்று பு இந்த அப்பளப்புவை இரும்பு சட்டியில் மணலை நன்றாக வறுத்து அதன் மேல் அப்பளப்புவை அள்ளிபோட்டால் அப்பளப்பு ரெடி. எண்ணெயில் வறுத்து எடுத்தால் விலை கட்டுபடியாகாது!
கடலை எண்ணெய்
இந்த கடலை எண்ணெயுடன் காட்டன் சீட் எண்ணெயை கலந்து கடலை எண்ணெய் என்று விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளைப்பூண்டு
சீனாவில் உணவுக்கு ஏற்றதல்ல என அறிவிக்கப்பட்ட சீனாபூண்டுவை நிறமேற்றி மலைப்பூண்டு என விற்பனை செய்யப்படுகிறது. சீனாபூண்டு வெண்மை நிறமாக காணப்படும். மலைப்பூண்டு பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
No comments:
Post a Comment