மணப் பாடு கடற்கரையை உலகத் தரத்துக்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, இங்கு வாட்டர் சர்பிங் விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது. உடன்குடி அருகேயுள்ள கடற்கரை கிராமமான மணப்பாடு. இங்கு மணல் குன்றின் மீது மிகவும் புகழ்பெற்ற திருச்சிலுவை ஆலயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இங்கு கிளைடர் பயிற்சியாளர்கள் வந்து பயிற்சியில் ஈடுபட்டனர். பின்னர் கிளைடர் பயிற்சி அப்படியே முடங்கியது.
இந்நிலையில், மணப்பாட்டை சுற்றுலா தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண் டுள்ளது. மணப்பாடு கடலானது ஒருபுறம் கடும் சீற்றத்துடன் அலையடித்துக் கொண்டும், மறுபுறம் அமைதியாகவும் இருக்கும். இதனால், நீர் விளையாட்டுகள் விளையாடுவதற்கு உகந்த இடமாக இந்த கடற்பகுதி அமைந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவு போன்ற நாடுகளில் வாட்டர் சர்பிங் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மணப்பாட்டிற்கு வந்து, வார்ட்டர் சர்பிங் விளையாட்டில் ஈடுபட்டனர்.
வார்ட்டர் சர்பிங் விளையாட்டை கலெக்டர் ஆசிஷ்குமார் துவக்கி வைத்தார். இதில் வெளிநாட்டினர், வாட்டர் சர்பிங் விளையாடியதுடன், மணப்பாட்டைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கும் பயிற்சியளித்தனர். ஹவாய் தீவை சேர்ந்த எரிக் கூறுகையில், ‘கடல் விளையாட்டு சம்பந்தமான விளையாட்டுகள் விளையாட எந்த பகுதி கடல் ஏதுவானது என இணையதளத்தில் பார்க்கும்போது மணப்பாடு பகுதி சிறந்தது என தெரியவந்தது. இந்த கடலின் அலை வாட்டர் சர்பிங் செய்ய நன்றாக உள்ளது. வரும் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் வாட்டர் சர்பிங் செய்ய மிக நன்றாக இருக்கும். அப்போது மீண்டும் இந்த இடத்துக்கு வருவோம்’ என்றார்.
No comments:
Post a Comment