''உடல் நலத்திற்கு பால் நல்லது அல்ல! ஒரு எச்சரிக்கை.
விவசாயிகளிடம் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் வாங்கிச் செல்லப்படும் பாலில் தண்ணீர் கலந்து விற்று கொள்ளையடிப்பார்கள்.
ஆனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயி எப்போதும் ஓட்டாண்டியாகவே இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் ஒரு ரூபாய் பால்விலை உயர்ந்தால் ''ஊரே நாடே ஐயோ பால் விலை ஏறிபோச்சே ''என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் எல்லோரையும் பார்த்து கேட்கிறோம்.
பாலில் தண்ணீர் கலப்பார்கள் என்பது மட்டும் தானே உங்களுக்கு தெரியும். . தெரியாதது... சோப் பவுடரும் , கிழங்கு மாவும் கலக்கிறார்கள் என்பது . ரத்தத்தை ' ஜிலீரிட ' வைக்கும் இந்தத் தகவல், அன்றாடம் பால் பயன்படுத்துபவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது .
" கொழுப்பு நீக்கப்பட்ட பாலில், புரதம் மட்டுமே இருக்கும் . அதில் நுரை அதிகம் வராது . அதற்காக சோப் பவுடர் கலப்பது உண்டு . அதனால் நுரை தளும்பத் தளும்ப வரும் . அதேபோல், பால் கெட்டியாக இருக்க மாவுச் சத்து ( ஸ்டார்ச் ) அதிகமுள்ள மரவள்ளிக்கிழங்கு சேர்க்கிறார்கள் . இதனால் பாலில் இயற்கையாக இருக்கும் சத்துக்கள் குறையும் . மற்றபடி பாதிப்புகள் பெரிதாக இருக்காது . ஆனால், சோப் பவுடர் அப்படியில்லை ! "
என்னதான் சூடாக்கினாலும், இந்த இரண்டு சேர்ப்பிகளும், இரண்டு மூன்று நாட்கள் வரை பாலிலேயே தங்கியிருக்கும் என்பது அதிர்ச்சி ரகம் . இதில், மற்றொரு கொடுமை என்ன தெரியுமா ? ' யூரியா'வும் கலக்கப்படுவதுதான் .
பொதுவாக ஒரு பொருளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்கு ' பிரிசர்வேட்டிவ்கள் ' சேர்ப்பதுண்டு . அதேபோல், கறந்த பாலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போகும் போது பால் கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு . அதனைத் தடுப்பதற்காக யூரியா சேர்க்கிறார்கள் .
இது மட்டுமா ? புளிக்காமல் இருக்க சோடியம் - பை - கார்பனேட்டும், அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்த ' ஹைட்ரஜன் பெராக்ஸைடும் சேர்க்கிறார்கள் .
பாலில் ' ஹைட்ரஜன் பெராக்ஸைடு ' ஒரு துளி விட்டால்போதும், கெட்டுப் போகாது . கூடவே அந்த ரசாயனம் கலந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதும் சிரமம் . இதில் உச்சகட்ட கொடுமை என்ன தெரியுமா ? கலப்பட பாலில் கொஞ்சூண்டு உப்பு அல்லது சர்க்கரை போட்டால் போதும், கலப்படம் வெளியில் தெரியாது . இருந்தாலும் இந்த ரசாயனச் சேர்மங்களை எல்லாம் ' நியூட்ரலைஸர்ஸ் ' என்கிற பட்டியலில் சேர்த்துவிடுவார்கள் .எனவே குழந்தைகளின் எதிர்காலம் என்ன ?
எனவே பாலை நேரடியாக விவசாயிகளிடம் பெறவேண்டும்.
அதுவும் நாட்டுப் பசுமாட்டுப் பாலாக இருந்தால் ஆண்மை தன்மை அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.உடலுக்கு நல்லது.
சீமை மாடுகள் அதாவது மேலை நாட்டு சிந்து மாட்டுப் பால்
நல்லது அல்ல.நேர் எதிரானது.
நாட்டு மாடுகள் அழிக்கப்படுகிறது.அடுத்த தலை முறைக்கு ஆபத்து எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு செய்வோம்.
சிந்திப்போம்.
.தமிழக விவசாயிகள் சங்கம்''
No comments:
Post a Comment