Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 27, 2014

அனைவரும் தூக்கி எறியும் கறிவேப்பிலையின் நன்மைகள்!!!

 
benefits of Curry leavesஉண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.

ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது.
சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
புற்றுநோய்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்.
இதய நோய்
கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
உடல் உஷ்ணம்
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணமானது குறையும்.
வெள்ளை முடி
கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தவி வந்தால், பரம்பரை நரை முடி வருவதைத் தடுக்கலாம்.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.
எடை குறைவு
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
இனிமையான குரல்
கறிவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், குரலானது இனிமையாகும்.
சளி
சளியால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், சளி குறையும்.
கண் பார்வை
பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment