Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, September 25, 2014

காபுலி புலாவ் – ஆப்கான் சிக்கன் புலாவ்




தேவையான பொருட்கள்
  • கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி 
  • ஏலக்காய் – 3
  • பிரிஜ்ஜி இலை – 2 
  • இலவங்கப்பட்டை- 2
  • கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி 
  • சீரகம் தூள் – 1 தேக்கரண்டி 
  • கொத்தமல்லி விதை தூள் – 1 தேக்கரண்டி 
  • சிகப்பு மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி 
  • கோழி, தோல் நீக்கியது – 8-10 துண்டுகளாக வெட்டவும்  
  • பாஸ்மதி அரிசி – 3 கப் 
  • தயிர் – 1 மே.கரண்டி 
  • பூண்டு விழுது – 1 டீஸ்பூன் 
  • இஞ்சி விழுது – 1 டீஸ்பூன் 
  • பச்சை மிளகாய் – 1 
  • உப்பு – தேவைக்கு 
  • சீனி – 1/2 கப் 
  • தண்ணீர் – தேவைக்கு 
  • அழகரிக்க தேவையான பொருட்கள் 
  • பெரிய கேரட், மெல்லிய கீற்றுகள் நறுக்கியவை – 2 
  • திராட்சை – 1/4 கப் 
  • வெண்ணெய் – 2 மே.கரண்டி 


Method

Step 1

அலகரிக்க: கேரட்டினை படத்தில் உள்ளது போல் நீட்டமாக நறுக்கி வைக்கவும். கடாயில் பட்டர் போட்டு கேரட்டினை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே பட்டர் பேனில் திராட்சை போட்டு வறுத்து எடுத்து தனியாக ஒரு பாயில் பேப்பரில் எடுத்து வைக்கவும். சுத்தமாக சிக்கனை அலசி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை, , மேலே சொன்ன அளவில் பாதி போட்டு சிக்கனில் போடவும் . மேலே சொன்ன மசாலா தூள் வகைகள் ,பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து விரவி 2 மணி நேரம் உறவைக்கவும். சிக்கன் ஊறிய பிறகு சிறுது தண்ணிர ஊற்றி வேக வைக்கவும் . வேக வைத்த சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும். தண்ணீரை தனியாக வைக்கவும்.

Step 2

அரிசி : அரிசியினை அலசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் . பிறகு ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் எடுத்து வைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை, தேவைக்கு உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொத்தி வரும் பொழுது ஊற வைத்த அரிசி போட்டு வேக வைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்து இருக்க வேண்டும் மற்றும் ஒரு பேனில் சீனி போட்டு 1 மே.கரண்டி தண்ணீர் விட்டு சிம்மில் வைத்து கரைக்கவும். பிரவுன் கலர் ஆகும் வரை கரைக்கவும். இந்த கலவையினை வெந்த அரிசியுடன் சேர்த்து மரகரண்டி வைத்து நன்றாக கிண்டவும்

Step 3

தம்: பிரியாணி பாத்திரத்தில் ரெடி செய்த அரிசி போடவும். அதன் மேலே எடுத்து வைத்த chicken தண்ணீர் சுற்றி வரை ஊற்றவும். அதன் மேலே ஓரமாக சிக்கனை வைக்கவும். ஃபயில் பேப்பரில் எடுத்து வைத்த கேரட், திராட்சை யை மடித்து அதனையும் மேலே வைக்கவும். படத்தில் உள்ளது போல் வைக்கவும். மேலே பாயில் பேப்பர் போட்டு மூடி போட்டு மேலே வெயிட் வைத்து சிம்மில் இருபது நிமிடங்கள் வேகவைக்கவும்.

Step 4

பரிமாறும் விதம் : ஒரு பவுலில் பாதி சாதம் வைத்து அதன் மேலே சிக்கன் துண்டுகளை வைக்கவும். அதன் மேலே மீதி சாதம் வைக்கவும் மேலே எடுத்து வைத்த கேரட், திராட்சை கலவையினை தூவி பரிமாரவும். விரும்பினால் பொறித்த வெங்காயம் மேலே தூவலாம் சுவையான காபுலி புலாவ் ரெடி இதனை புளிப்பு கத்தரிக்காய் குடைமிளகாய் கறியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
 
.

No comments:

Post a Comment