Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 26, 2015

முகநூலில் என் பதிவுகள்{3}

ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே..?
இன்னும் மறக்காமல் இருந்தால்
ஒரு லைக் போடுங்க....
#######################################
ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதியரசர் மதிப்புக்குரிய மார்கண்டேய கட்ஜு சொல்கிறார்.
நாட்டின் பெரிய பெரிய தொலைகாட்சி தொகுப்பாளர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் தங்களுடைய மனசாட்சியை விற்றவர்கள். பணத்தாசை பிடித்தவர்கள் .பிரமாண்டமான பங்களாக்கள் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆடம்பர கார்களில் பவனி வருகின்றனர். சமீபத்தில் ஒருவர் புது டில்லியில் 52 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கியிருக்கிறார் . இன்னொருவர் 50 கோடிக்கு ரூபாய்க்கு பண்ணை வீடு ஒன்று வாங்கி விட்டார் .
இவர்கள் நாட்டின் உண்மையான பிரச்சனைகளை நேர்மையான முறையில் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பத்திரிக்கையாளர் சாய்நாத் போன்றவர்கள் விதி விலக்கு என்று மறக்காமல் குறிப்பிடுகிறார். நீதியரசர் .மார்கண்டேய கட்ஜு அவர்கள் பத்திரிக்கையாளர் கவுன்சில் தலைவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. கற்பனையாகவா இப்படியெல்லாம் சொல்லுவார் ?
எல்லா தொலைக்காட்சிகளின் தேர்தல் கணிப்புகளும் ஏன் பொய்த்துப் போகின்றன !. பீகார் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும் இவர்கள் நடத்திய நாடகத்தை என்னவென்று சொல்லுவது !!
செய்திகளிலும் விவாதங்களிலும் மெய்ப்பொருள் அறிய முயற்சிப்போம் .
##################################
முதியோர் இல்லத்திற்கு பெற்றோர்களை கொடுத்துவிடாதீர்கள் என்ற விளம்பரம் தொடரும் அதே நேரத்தில், பல முதியோர் இல்லங்கள் தங்களை விளம்பரப்படுத்தி வியாபாரம் நடத்துகின்றன. விளம்பரப்படுத்தவே அதிகளவு செலவு செய்யும் போது அதனால் அவர்கள் எதிர்பார்க்கும் இலாபத்தை கணக்கில் எடுக்கவேண்டியுள்ளது. நாமோ அவர்கள் ஏதோ இலவச சமூக சேவை செய்வதை போல துதிபாடிக்கொண்டுள்ளோம். 
#####################
சென்னை மாநகரின் தண்ணீர் பஞ்சம் தற்காலிகமாக தீர்ந்தது...
நிரம்பியது பூண்டி ஏரி: உபரி நீர் திறப்பு
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி கனமழை காரணமாக நிரம்பியுள்ளது. ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
திறந்து விடப்பட்டும் நீரால் ஒருபுறம் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.என்றாலும் தண்ணீர் திறந்துவிடப்படுவதை காண அங்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். பாதுகாப்பு கருதி, ஏரியில் குளிக்க பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ளனர்.
################################
துபாய் புருஜ் கலீபா(Burj khalifa) வின் அழகிய தோற்றம்
##############
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்: சங்கர் சிங் வகேலா வலியுறுத்தல்....
‪#‎முதல்ல‬ இடிச்ச மசூதிய கட்டுங்க...
###########
தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 940 கோடி ஒதுக்கீடு: பிரதமர்
‪#‎யானைப்‬ பசிக்கு சோளப்பொரி...
###############
மலையில்...மாலையில்...மழை
‪#‎உலக_புகைப்பட_தினம்‬
###############இடர்கள் தான் வாழ்க்கையென்றால்
நான் வாழ்வை நேசிக்கிறேன்...
##########################################################
நான் சொல்லலே..
அதிமுக எம்.எல்.ஏ வே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்...
##########################################
ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை:
ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக PAN நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்?கட்டாயம் இதைப் படியுங்கள்...
நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN நம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் உங்கள் பெயர், முகவரி, வயது மற்றும் அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும்.
இங்கு தான் பிரச்சனையே. உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எப்படி?
தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை. இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஒருவர் ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார். அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார். அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார். ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார்.
எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை அடையாள அட்டையாக காட்டவும்.இதை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் அனைவரும் SHARE
செய்யுங்கள்.
இதைஅனைவரும் SHARE செய்யுங்கள்.


No comments:

Post a Comment