பாலைவனத்தில்,
ஒரு பகுதியை காட்டி, "நாளை முதல் இந்த இடம் உனக்கு சொந்தம்" என்று
அமீரகவாசியிடம் கூறியது, அல் அய்ன் நகர முனிசிபாலிடி.
அந்த
அரபியோ "இந்த இடத்தில் நான் என்ன செய்ய?" என்று கேட்டார். "இந்த இடத்தில்
நீங்கள் தக்காளி பயிரிட போகிறீர்கள்"! என்றது அரசு. அந்த அரபிக்கு
ஆச்சரியம்.
அந்த
அரபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாலைவன மண்ணை சுமார் 5 அடிக்கு அள்ளி
வெளியேற்றினார்கள், பிறகு பயிரிட தோதுவான மண்ணை அந்த இடத்தில்
கொட்டினார்கள். தண்ணீர் வசதி அங்கே கொண்டுவந்தார்கள், தக்காளி
பயிரிட்டார்கள், நல்ல விளைச்சல், தக்காளி நன்றாக காய்க்க தொடங்கியது, அந்த
இடத்தின் சொந்தகாரராக அறிவிக்கப்பட்ட அந்த அரபி சும்மா வேடிக்கை மட்டும்
பார்த்து கொண்டு இருந்தார், அறுவடை நடந்தது, அரசே அந்த தக்காளிக்கு உரிய
விலை கொடுத்து அந்த அரபியிடம் வாங்கியது, வாங்கிய தக்காளியை சில
பரிசோனைகளுக்கு பின்பு கொண்டு போய் குப்பையில் கொட்டினார்கள். அனத்து
சிலவையும் அரசே செய்துவிட்டு, தக்காளியையும் விலை கொடுத்து வாங்கினார்கள்.
இது
போன்று மூன்று முறை செய்தார்கள், நான்காவது முறை அந்த தக்காளியை
குப்பையில் கொட்டாமல், தக்காளி பேஸ்ட் தயாரித்து விற்பனைக்கு
அனுப்பினார்கள், சும்மா வெறுமனே நின்றும் அந்த அரபிக்கு அதன் லாபத்தை
கொடுத்தார்கள். பின்பு தக்காளி பழமாக மார்கெட்டில் விற்பனைக்கு
அனுப்பினார்கள். அதன் லாபத்தையும் அந்த அரபிக்கே கொடுத்தார்கள்.
ஐந்தாவது
விளைச்சல் ஆரம்பிக்க போகும் போது, அந்த அரபியை அழைத்து, "இனி நீ தான்
விளைவிக்க வேண்டும்" என்று கூறினார்கள் - இதுதான் விவசாயம் என்பது, இதைதான்
பாலைவன மக்கள் கற்றுக்கொண்டார்கள்.
ஐக்கிய
அரபு அமீரகத்தில் அல் அய்ன் என்ற இடம், இது அபுதாபியின் கீழ் இயங்கும்
நகரம். தற்போது, அன்றாட தேவைக்கான அத்தனை காய்கறிகளும் விளைவிக்க
படுகின்றன. இன்னும் சில வருடங்களில் அவர்கள் தன்னிறைவை அடைவார்கள், கோழி
பண்ணை, பால் பண்ணை போன்றவைகளும் இங்கே பிரபலம். பெட்ரோல் ஏற்றுமதியை போலவே,
உணவு பொருட்களையும் அரபு நாடுகள் ஏற்றுமதி செய்தாலும் ஆச்சரியம் இல்லை.
அரபுநாட்டு தக்காளி, வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்யும் காலம் வரலாம்!
விளைநிலங்கள்
- வீட்டு மனைகளாக ஏமாற்றப்படுகின்றன. தண்ணீருக்கு கையேந்தி காத்து
இருப்பது போல, அரிசிக்கும் பருப்புக்கும், காய் கறிக்கும் கையேந்தி
நிற்கும் அவலம் தமிழகத்தில்.
இணையத்திலிருந்து..
################################
ஒரு
லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, "
நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று
சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர்
: " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ்
அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு
சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
.
.
.
.
.
.
.
.
.
சிரிக்க சிந்திக்க......
################################
சத்யபாமா
பல்கலை கழகம் மட்டும் அல்ல இந்த SRM பல்கலை கழகமும் ஏதோ ஒரு ஏரியை ஏப்பம்
விட்டு நிற்கும் அவலத்தை அனைவரும் அறிந்து கொள்ள செய்யுங்கள் .
SRM university , Chennai , பொத்தேரி என்றால் அதில் ஏரி இருந்ததா இல்லை பேரில் மட்டும்தான் ஏரியா ?
நாம் ஏமாந்தோம் நம் பிள்ளைகள் நிம்மதியாக வாழ இனி மேலாவது இப்படி சமூக அசிங்கங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் காப்போம்.
செய்தியை அனைவருக்கும் பரப்பி விழிப்புணர்வு கொள்ள செய்யுங்கள் .
Engr Sulthan
No comments:
Post a Comment