சென்னையில் தீண்டத் தகாத பகுதி புதுப்பேட்டை:)
எந்தவிதமான அரசு நியாய விலைக் கடைகளும்(கூட்டுறவு அங்காடிகள்) இல்லாத பகுதி இது.
அரசு திறந்துள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகள் 92 ல் ஒரு கடை கூட புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் கிடையாது..
திறக்கப்பட்ட
இடங்களில் பெரும்பான்மையானது மேல்மட்ட வர்க்கம் வாழும் பகுதி மற்றும் ஒரு
குறிப்பிட்ட சமூகம் வாழும் பகுதி. உ_ம் மைலாப்பூர் திருவான்மியூர் போன்ற
இடங்கள்..
இதில் புதுப் பேட்டை மட்டும் இரண்டு மாநகராட்சி வார்டுகளை உள்ளடக்கிய பகுதி...
அரசு வழங்கும் இலவசங்களும் கடைசியாக மிஞ்சியது மட்டுமே இங்கு அரைகுறையாக வழங்கப் படும்..
கவுன்சிலரோ அவரது தேவைகளை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்..இதற்கே அவருக்கு நேரம் பத்தவில்லை...வசூல் மன்னர்...
எங்க
சட்டமன்ற உறுப்பினர் (திமுக) தொகுதி பக்கம் வந்ததே இல்லை..அவருக்கு பாஜக
நடத்தும் விநாயக சதுர்த்தி போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவே நேரம் சரியாக
இருக்கிறது.. அவரது தொகுதி பெயர் கூட நினைவிருக்குமா என்பதே சந்தேகந்தான்..
அரசியல் வாடை இன்றி இப் பகுதி பொது மக்களில் ஒருவனாக என் ஆதங்கத்தை பதிவிடுகிறேன்..
எல்லா
விஷயங்களிலும் இப் பகுதியை பொறுத்தவரை அரசு மெத்தனமாகவும், மாற்றாந்தாய்
மனப்பான்மையுடனும் செயல் படுகிறது.. போராடி பெற்றுத் தர வேண்டிய சட்ட மன்ற,
மாமன்ற உறுப்பினர்களோ யாருக்கோ வந்த விதியென்று மௌனச் சாமியார்களாகி
விட்டனர் என்பது தான் கொடுமை..இப்பகுதி மக்களும் போராட வலிமையற்ற
அப்பாவிகள் என்று தான் சொல்ல வேண்டும்..
ஆம் நாங்கள் ஒதுக்கப்பட்ட பின் தங்கிய, தீண்டத் தகாத மக்களாகி விட்டோம் அரசை பொறுத்தவரை...
அரசியல்
வாதிகளே! வாக்குச் சீட்டு என்பது மைலாப்பூர் காரனுக்கும், புதுப்பேட்டை
காரனுக்கும் ஒரே மதிப்புள்ளது தான்... வாயும் வயிறும் ஒன்று தான்..நினைவில்
கொள்ளவும்..
இதே
சட்டமன்ற உறுப்பினர் திரும்பவும் 2016 ல் இத் தொகுதியில் நின்றால் எ்ங்கள்
வாக்கு அவருக்கில்லை...அரசியல் கடந்த, பசியின் ஞானமிது..
குறிப்பு: 80% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி இது.
..
#மறக்கடிக்கப்பட்ட_புதுப்பேட்டை_மக்கள்
#################################
நான்கு நாட்களுக்கு பிறகு இன்று தான் சூரியன் முகம் காட்டுகிறது..
மகிழ்ச்சி!
மழை பெய்த சுவடே இல்லாமல் ஒரு தெரு...
ஆம் புதுப்பேட்டையில் எங்க தெரு தான் இது..
மழை
பெய்த அடுத்த விநாடியே அனைத்து நீரும் அருகில் உள்ள சென்னையின் ஜீவ நதி
கூவத்தில் வடிந்து விடும்..ஒருநாளும் தண்ணீர் சிறிதும் தேங்காத எங்க தெரு
இது.. .
#தெரு_பெருமை
No comments:
Post a Comment