அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண்: குவியும் பாராட்டுக்கள்.
அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு
எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்
ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை
வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான
கொள்கைகளை உடைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும்
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி
வருகிறார்.
பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில்
உள்ள இஸ்லாமியர்கள்
ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து,
‘தாங்கள் இஸ்லாமியர்கள்’ என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியதாக
கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளரின் இந்த கருத்தால் மனம் வேதனை அடைந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
’’டியர் டொனால்ட் ட்ரம்ப், என்னுடைய பெயர் மார்வா. நான் ஒரு இஸ்லாமியர்.
இஸ்லாமியர்கள் அனைவரும் அடையாள அட்டை ஒன்றை அணிய வேண்டும் என நீங்கள் கூறியதாக நான் அறிந்தேன்.
அதனால், நானே ஒரு
அடையாள அட்டையை தெரிவு செய்ய முடிவு செய்துள்ளேன்.
என்னை பார்த்தால் ‘நான் ஒரு இஸ்லாமியர்’ என எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ள
முடியாது. ஆகவே, தற்போது நான் தெரிவு செய்யும் அடையாள அட்டை என்னை மிகவும் பெருமைக்கொள்ள செய்யும் என நம்புகிறேன்.
அதற்கு பெயர் ‘அமைதி’ என்ற அடையாள அட்டை. இந்த அமைதி என்ற அடையாளத்தை தெரிவு செய்ததற்கு காரணம், என்னுடைய இஸ்லாமிய மதம் அமைதியை மட்டுமே போதிக்கிறது என்பதனால் அதனை தெரிவு
செய்துள்ளேன்.
இந்த இஸ்லாமிய மதம் தான் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க தூண்டியது.
ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள சிந்திக்க வைத்தது.
இந்த இஸ்லாமிய மதம் தான் ’ஒரு அப்பாவியை கொலை செய்வது என்பது
ஒட்டுமொத்த மனித குலத்தையே கொல்வதற்கு சமமானது’ என்பதை எனக்கு
கற்றுக்கொடுத்தது.
அதேபோல், இஸ்லாமியர்களாகிய நாங்கள்
அனைவரும் எங்கு இருக்கிறோம் என்பதனை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்புவதாகவும் நான் அறிந்தேன்.
நல்லது!
நான் தற்போது புற்றுநோய்
குறித்து பொதுமக்களிடமும், பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அங்கு வந்து நீங்கள் என்னை சந்திக்கலாம்.
அல்லது, எங்களுடைய உள்ளூர் மசூதியில் வீடில்லாத
ஏழை, எளிய மக்களுக்கு நாங்கள் தினந்தோறும்
சாண்ட்விச் உணவுகளை தயாரித்து வழங்கி
வருகிறோம்.
இங்கு அனைத்து மதத்தினருக்கும் உணவு
வழங்கி வருகிறோம். இந்த மசூதிக்கு வந்து நீங்கள்
என்னை சந்திக்கலாம்.
இவை அனைத்தையும் பார்த்த பிறகாவது, இஸ்லாமியராக இருக்கும் நான் உங்களை விட
சிறந்த அமெரிக்கராகவும் இருக்க தகுதியானவள் என்பதை நீங்கள் உணர முடியும்.
நான் கடந்த செல்லும் பாதையில் நீங்கள்
நடந்து வந்தால், உங்களை விட சிறந்த மனிதராக
நான் இருப்பேன் என்பதை நீங்களே கண்கூடாக
பார்ப்பீர்கள். வணக்கம்” என அந்த பதிவில் உருக்கமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட இந்த பதிவை பாராட்டி இதுவரை சுமார் 1 லட்சம் பேர் விரும்பியுள்ளதுடன், 80
ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment