Saturday, August 29, 2015
மண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்! ( மினி தொடர்: பகுதி - 2 )
கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளையும் மட்டுமே சொல்லி வந்த ஆன்மீகம், காலப்போக்கில் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என சொல்லப்பட்டது. அந்த நேரத்தில், மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் ஆசையையும் கணக்கில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் நாக மாணிக்க கல். நாக மாணிக்க கல் என்றால் என்ன? எப்படியெல்லாம் இதில் மோசடி நடக்கிறது? உண்மையில் நாக மாணிக்க கல் என்பது உண்மையா என்பதை பார்க்கலாம்...
மண்ணுளி முதல் ஈமு வரை..கொங்கு மோசடிகள் - 1
சதுரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம்.
Friday, August 28, 2015
மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.
இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்:
விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் இயற்கை வேளாண் முறையின் மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.
நோய்களை குணமாக்கும் தண்ணீர்: சூப்பர் டிப்ஸ்
நோய்களால் அவதிப்படும்போது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பணம் கொடுத்து மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.
மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.
ஆனால், பணம் செலவழிக்காமல் நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தருவது தான் தண்ணீர்.
மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.
பூசணிக்காயை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!
பெண்கள் தங்கள் உணவில் ஒருசில உணவுப் பொருட்களை தவறாமல் சேர்த்து வர வேண்டும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள ் வேண்டும். எனவே பெண்கள் ஊட்டச்சத்துக்கள ் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக கீரைகள், தானியங்கள், நட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவைகளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள ் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்ட ுள்ளன.
Saturday, August 15, 2015
உயர்ந்த உறவுகள்
உறவுகளை பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள்,
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: -
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘தாய் தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். (நான் தொடர்ந்து) ‘பிறகு எது?’ என்றேன். அவர்கள்,
Saturday, August 8, 2015
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் நஞ்சு : அதைக் குடிக்காதீங்க!
ஒரே ஒரு நாள் வெளியில் தண்ணீர் குடித்துவிட்டாலும்கூட, உடனே சிலருக்குச் சளி பிடித்து மூக்கு ஒழுக ஆரம்பித்துவிடும், தொண்டை கட்டிக்கொள்ளும், காய்ச்சலும்கூட எட்டிப்பார்க்கலாம். டாக்டரிடம் போனால், அவர் முதலில் கேட்கும் கேள்வி, “வெளியே தண்ணீர் குடித்தீர்களா?” என்பதுதான்.
பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பாட்டில் குடிநீரை வாங்கிக் குடிப்பதைப் பரவலாகப் பார்க்க முடிந்ததில்லை. போகுமிடத்தில் கிடைத்த தண்ணீரைத்தான் எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தோம். எல்லா நேரமும் பெரிய நோய்கள் தொற்றிக்கொண்டிருக்கவில்லை. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. என்ன நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தில், பலரும் லிட்டருக்கு 15 ரூபாய் கொடுத்து பாட்டில் குடிநீரை நம்பிக் குடிக்கிறோம்.
தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள்
Friday, August 7, 2015
ஹஜ் செய்யவிருக்கும் ஹாஜிமார்களுக்கு டாக்டரின் அறிவுரை.!
ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!
Dr.ஜெ.முஹ்யித்தீன்அப்துல் காதர் MBBS, MS
உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!
மது உள்ளே.. மதி வெளியே..
அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அடுத்த நாள் காலை தாங்க முடியாத தலைசுற்றல் ஏற்படும் என்பது 'குடிமகன்கள்’ அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால், தொடர்ந்து மது குடிப்பதால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எந்த அளவுக்குப் பாதிப்பு அடைகின்றன என்பது குறித்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் கருணாநிதி அளிக்கும் அதிர்ச்சிப் பட்டியல் இது...
Tuesday, August 4, 2015
வெள்ளந்தி மனுஷன் விஜயகாந்த்
Tuesday, July 28, 2015
கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
'Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.
2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம் போயிருக்குமே!’ என்பார்.
Monday, July 27, 2015
சாதிக்க வைத்த மாத்தி யோசி டெக்னிக்!!
தமிழர்களுடைய முக்கிய பண்புகளில் விருந்தோம்பலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு .அதுவும் உணவு உபசரிப்பின் போது, உட்கொள்ளும் உணவை வாழை இலையில் உட்கொண்டால் தான், நம்மில் பலருக்கு "விருந்து" சாப்பிட்ட உணர்வு , தித்திப்பாக தொண்டையில் நிற்கும் .வாழை இலை எளிதில் மட்கும் பொருள் என்பதால் ,இது சுற்றுச்சூழலையும் எளிதில் மாசுபடுத்தாது .
Sunday, July 26, 2015
இறால் மலாய் குழம்பு
என்னென்ன தேவை?
இறால் - 1 கிலோ (சுத்தம் செய்தது),
வெங்காயம் - 1 + 1 (நறுக்கியது மற்றும் பேஸ்ட் செய்தது),
பூண்டு - 8 (பேஸ்ட் செய்தது),
பச்சை மிளகாய் - 2 + 6 (நீளமாக கீறியது மற்றும் பேஸ்ட் செய்தது),
தேங்காய் பால் - 1 கப்,
கடுகு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
Thursday, July 23, 2015
`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்
`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்
வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு.
இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது.
Wednesday, July 22, 2015
பழச்சாறு தயாரிப்பு! சர்வசாதாரணமாக 30% லாபத்தை அள்ளலாம்!
வாரம் ஒரு தொழில்! - பழச்சாறு தயாரிப்பு!
ஆண்டுக்கு எட்டு மாதம் வெயில் சுட்டெரிக்கும் நம்மூரில் சில்லென்று கிடைக்கும் குளிர்பானங்களுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பழச்சாறு தயாரிப்பு பிஸினஸ்தான் இப்போதைக்கு செம ஹிட்!
Tuesday, July 21, 2015
எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்!
எம்டன் வந்தான்... எம்.ஜி.ஆர். வந்தார்! (மெட்ராஸ் நல்ல மெட்ராஸ
(மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-21)
சென்னையில், "அவனா எம்டனாச்சே... !" என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள், இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.
சென்னையில், "அவனா எம்டனாச்சே... !" என்ற சொல் வழக்கு கொஞ்ச காலம் முன்னாடிவரை சகஜமாக இருந்தது. எம்டன் என்பதை சிலர் எமன் என்ற அர்த்தத்தில் சொல்வர். சற்றே சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர் என்பது தெரிந்திருக்கும்.
1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக இருந்த ஜெர்மானியர்கள், இங்கிலாந்தை தாக்குவதற்கு படை திரட்டி வந்தனர். இந்தியாவும் அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவும் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பார்க்கப்பட்டது.
உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா?
வாசகிகளின் ஆசையை உடனடியாக நிறைவேற்றுவது தானே 'அவள்' கடமை.
ஏ.சி-க்கு அடுத்தபடியாக ஃப்ரிட்ஜிலிருந்தே இதோ, கச்சேரி ஆ...ர...ம்...ப...ம்...
Subscribe to:
Posts (Atom)














