Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, October 9, 2013

வேப்பம் பூ - மருத்துவ பயன்கள்..!




வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.


வேப்பம் பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும். வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும். வாயுத்தொல்லை, ஏப்பம் அதிகமாக வருதல், பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment